பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது சட்ட எரிப்பு (1986)

1964க்குப் பிறகு அரசியல் சட்ட எரிப்பு 1986ல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 1964ல் நான் இந்தி ஆட்சி மொழிப்பிரிவை எரிக்கும் பொழுது எனக்கு வயது 34. இரண் டாவதாக மதுரையில் நான் எரிக்கும்போது எனக்கு வயது 58.

இந்திதான் இ ந் தி யா வி ன் ஆட்சி மொழி என்ற பிடி வாதத்தை மத்திய சர்க்கார் ஒருபோதும் விட்டுக்கொடுக்க வில்லை அதுபோலவே அதை எதிர்ப்பதற்கும் தி. மு.க. ஒரு போதும் பின் வாங்கியதில்லை. மத்திய சர்க்காருக்கும் தமிழ் நாட்டிலுள்ள தி.மு.க.வுக்கும் இந்த யுத்தம் 50 ஆண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. மிஞ்சில்ை கெஞ்சவும், கெஞ்சில்ை மிஞ்சவும் என்கின்ற போக்கைப் பி ன் ப ற் றி வருகிற மத்திய அரசாங்கத்திற்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.என்பதற் காக மறுபடியும் அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவை எரிப்பது. என்று தி.மு.க. தீர்மானித்தது. 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி இந்த மொழிப் போர் தொடங்கியது. கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இந்த மொழிப் போரை சென்னையில் தொடங்கினர். தலைவர் கலைஞர் முடித்து வைத்தார். அதைத் தொடர்ந்து கழகம் தீர்மானித்தபடி ஒவ்வொரு மாவட்டத்திலேயும் இந்த மொழிப்போர்க் கிளர்ச்சி தொடங்கப்பட்டது. 1964ல் கூட இவ்வளவு முன்னேற்பாடுகள் வாதப் பிரதி வாதங்கள் நடந்தது இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் மாவட்டத் தலைநகரங்களுக்குச் சென்று மொழிப்போர் துவங்குவதின் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னர். தமிழ் நாட்டில் ஒவ்வொருவரும் தி. மு. க. மொழிப் போரைப் பற்றிப் பேசி, விளக்கி விமர்சிப்பதற்குக் கலைஞரின் இந்தப் பயணம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது,

இந்தி மொழி ஆதரவாளர்களும், அகில இந்தியக் கட்சியுை. சேர்ந்தவர்களும் தி. மு. க. வின் மொழிக் கிளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது-எங்களைத் தேச விரோதிகள் என்று வருணி தார்கள். அரசியல் சட்டம் புனிதமானது அதை யாரும் தீண்டக் கூடாது என்பது அவர்கள் வாதம். தி. மு. க. தலைவர் கலைஞர் இதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் சரியான பதிலடி கொடுத்தார்.

91.