பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்தி இரண்டு தி.மு.க. வினர் நேற்று (திங்கள்) மதுரை நீதித்துறை தலைமை மாஜிஸ்திரேட் பி. தனபால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதே பேரில் மதுரை கட்டப் பொம்மன்சில அரு கே கைதான முன்னுள்M.L.A. காவேரி மணியம் உள்பட ஐம்பத்தி இரண்டு பேரும் அதே கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்கள்.

அவர்களிடத்தில் மாஜிஸ்திரேட் பி. தனபால் கே ள் வி

கேட்டார். அதற்கு எஸ். எஸ். தென்னரசு, தாவூது, காவேரி

மணியம் ஆகியோர் பதில் அளித்தனர். அதன் வி வர ம்

வருமாறு :- -

கேள்வி :- மதுரையில் கோட்டா சித் தலைவரின் ஒப்புதலின் பேரில் மதுரை நகர் போலீஸ் துணை சூப்பிரெண் டெண்ட் போலீஸ் ஒழுங்கு முறைச் சட்டம் பிறப் பித்துஇருந்தது தெரியும்ா?

பதில் :- தெரியாது.

கேள்வி :- நீங்கள் ஊர்வலமாகச் சென்ற போது போலிஸ் அதிகாரி போட்ட தடை உத்தரவு நகலை உங்களி டம் கொடுத்து அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறும்படி இன்ஸ்பெக்டரிடம் கூறியது தெரியுமா? -

பதில் :- தெரியாது.

கேள்வி :- தடையை மீறி ஊர்வலம் சென்ற போது போலிஸ் தடை உத்தரவு நகலே உங்களிடம் கொடுத்துக் கையெழுத்து வா ங் கி ய த ாக இன்ஸ்பெக்டர் கூறுகிருரே? -

பதில் :- தடையை மீறவில்லை. நகல் பின்னல் கொடுத்துக்

கையெழுத்து வாங்கப் பட்டது.

கேள்வி :- போலீசார் உங்களைக் கலைந்து போகச் சொன்ன தாகவும் நீங்கள் மேடையில் ஏறி ஒரு காகிதத்தை எரித்ததாகவும் அரசுத் தரப்புச்சாட்சி கூறியுள் ளாரே? உங்கள் பதில் என்ன?

பதில் : போலிசார் எங்களைக் கலந்து போகச் சொல்ல வில்லை. காகிதத்தை எரித்தோம். ம ற் ற ைவ

தெரியாது.

102