பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரவேண்டும் எனச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனல் அவர்களுக்குத் தரப்படவில்லை, -

இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்று நேற்றல்ல. ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இந்தப் போராட்டம் நடை பெற்று வருகிறது. இப்போது நடைபெற்ற போராட்டம் ஒரு பொறுப்பு மிகுந்த அ ர சி ய ல் கட்சியான தி.மு.க.வினரால் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கோவையில் நடைபெற்ற மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அங்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களால் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தது. மேலும் எங்கிருந்து யார் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு எங்கு வைத்து இந் த ப் போராட்டம் நடக்கிறது என்பதை முன் கூட்டியே அறிவிக்கப் பட்டது. இது பற்றிய பட்டியல்கள் தினகரன், முரசொலி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. - +

மதுரை நகர் செயலாளர் இதற்கான அ னு மதி கேட்டு மதுரை நகர் போலீஸ் துணை சூப்பிரெண்டிற்கு மனுக் கொாடுத் தார். அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு நடந்த போராட்டமாகும். இது போலீசாருக்கு நன்கு தெரியும். - -

தி.மு.க.வினர் தடையை மீறி ஊர்வலமாகச்சென்றனர். சட்டத்தை எரிப்பது பிடி கட்டளை (வாரண்டு) இன்றிக் கைது செய்யப்ப்ட்க் கூடிய குற்றம் என்று போலீசாருக்குத் தெரியும். தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்றபோது போலீசாரும் பாது காப்புக்குச் சென்று உள்ளனர். பிடி கட்டளை இல்லாமல் கைது செய்யப்படக்கூடிய குற்றம் எனத் தெரிந்தும் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்யவில்லை. -

சம்பவ இடத்தில் ஏ ற்ப ா டு செய்யப்பட்டிருந்த ஒலி பெருக்கியை மட்டும் அனுமதியில்லை என்று கூறி த டு த் த போலீஸ் அதிகாரிகள் தடையை மீறி ஊர்வலம் சென்ற தி.மு.க. வினரை உடனடியாகக் கைது செய்யாதது ஏன்? தி.மு.க.வினர் கட்சி மேலிடம் என்ன உத்தரவு இட்டதோ அதன்படிபோராட் டத்தில் ஈடுப்ட்டு உள்ளனர். . .

இ.த.ச. 188-ஐ மீறுவது குற்றமல்ல. அதேபோல் ஒரு துண்டுப் பேப்பரில் சில வார்த்தைகளை எழுதி எரிப்பதும் குற்ற மல்ல(சில சட்ட்புத்தக்ங்களைக்கோர்ட்டில் ப்டித்துக்காட்டினர்.)

104