பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி மு. க.வின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் க ட ந் த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவை ஆட்சி செய்த மூன்று பிரதமர்கள் இந்தியை நாங்கள் திணிக்க மாட் டோம் எனப் பல முறை வாக்குறுதி கொடுத்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் ஐம்பதுக்கும் மே ற் ப ட் ட தடவைகள் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன. எரிக்கப்பட்ட பேப்பரில் தமிழிலும் வார்த்தைகள் உள்ளன. அதை அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாகக் கருத முடியாது. எங்களுடைய குறிக்கோள் இ ந் தி தேசிய மொழியாக இருக்கக் கூடாது. அதற்கேற்ப இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது தான். - -

போராட்டம் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் நடந்த மாணவர்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசும்போது "நாளை நீங்கள் வாழ இன்று எங்களை அழித்துக்கொள்ள தயாராக இருக் கிறோம்' என்று கூறியுள்ளார். இந்தப்போராட்டத்தின் நோக்கமே இந்தி பேசாத மக்களின் சந்ததியினர் எதிர்காலத்தில் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடக் கூடாது என்பதுதான்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் இந்த நாட் டி ன் பிரதமரைவிட உயர்வானது. இந்த நாட்டைவிட உயர்வானது, அதல்ைதான் பிரதமர்கள் உறுதிமொழி கொடுத்தும் நாங்கள் அரசியல் அமைப்புச் சட்ட த்தில் திருத்தத்தைக் க்ொண்டுவர வேண்டும் எனப் போராடுகிறோம். அதை அவமதிக்கும் நோக்கம் இல்லை. ஆகவே இந்தித்திணிப்பு இல்லை என்று அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் வேண்டும் எனக்கேட்டுப் போராடுகிறோம். -- ، . . .

தேசிய கீதத்தைப் பாட மாட்டோம் என்று கூறுவது தேசிய அவமதிப்பாகும் என்று தொடரப்பட்ட வழக்கில் தேசியகீதத்தைப்பாட மறுப்பது தேசிய அவமரியாதை ஆகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறி உள்ளது.

தமிழக சட்ட மன்றத்தில்கூட எம் ஜி.ஆர். அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் எனத் தீர்மானம் போட்டு உள்ளது. அப்படி என்றால் எம். ஜி. ஆர். அரசு போட்டு உள்ள தீர்மானம் அரசியல் சட்டத்திற்கு எதிரான தீர்மானமா?

இந்தப் போராட்டத்தின்போதுபதினைந்து ஆயிரம் தி.மு.க. வினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக்கைது செய்யப் பட்டனர். அப்படி இருந்தும் தி. மு. க. வினர் ஊர்வலம் சென்றனர் அதன் இரு புறத்திலும் போலீசார் வந்து உள்ளனர்

165