பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளும் தி.மு.க.வினரை ஊர்வல மாகச் செல்ல அனுமதித்து இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போரில் ஈடுபட அனுமதித்து இருக்கிறார்கள். பிறகுதான் அவர்களைக் கைது செய்து உள்ளனர்.

இது எப்படி உள்ளது என்றால் ஒரு கடைக்காரனை ஐம்பது பேர் சேர்ந்து கொலை செய்யப் போகிறோம் என்று போலீசுக்கு தகவல் சொல்லி அதற்குப் போலிசாரே பாதுகாப்பாக வந்த பிறகு கடைக்காரனைக் கத்தியால் குத்தும்வரை காத்திருந்து குத்திய பின்பு கைது செய்வது போல் உள்ளது. -

இந்தப் போராட்டத்தின் போது வன்முறைச் சம்பவங்கள் இல்லை. போக்குவரத்துப் பாதிக்கப்படவில்லை. ஆகவே இது, இ. த. ச. 188-ன் படியோ மற்ற பிரிவுகளின் கீழோ குற்றம் ஆகாது.

இவர்கள் செய்த ஒரே குற்றம் தடை உத்தரவு இருக்கிறது எனத்தெரிந்தும் கூட்டமாகக் கூடியதுதான். இது தவிர எந்தக் குற்றங்களும் அவர்கள் செய்யவில்லை. ஆகவே இ த.ச. 143 அல்லது 151 பிரிவின் கீழ்தான் குற்றவாளியாக முடியும்.

இவர்கள் ஏற்கனவே ஐந்து வாரகாலம் சி ைற யி ல் உள்ளனர். தமிழ் காக்கப் போராடும் தமிழர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே சி ைற யி ல் இரு ந் த நாட்களைத் தண்டனைக் காலமாகக் கருதி தமிழர் திருநாளுக்கு முன்பு அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.’’ -

இவ்வாறு அவர் வாதிட்டார். -

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் பி. தனபால் மறுநாள் தீர்ப்புக் கூறுவதாகக் கூறி வழக்கைத் தள்ளி வைத்தார். - , -

106