பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை. ஜனவரி 14.

மதுரையில் மொழிப் போரில் குதித்த தென்னரசு உள்பட 124 தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது சாட்டப்பட்ட தேசிய அவமதிப்புச் சட்டக்குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.

மதுரையில் கடந்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நெல் பேட்டை அண்ணுசிலை அருகில் மொழிப் போரில் ஈடுபட்ட தி.மு.க. அமைப்புச் செயலாளர் எஸ். எஸ். தென்னரசு, நகர் மாவட்டச் செயலாளர் கே. தாவூது, அவைத்தலைவர் கே. பெரி யாண்டி, முன்ள்ை கவுன்சிலர் ஆறுமுகம், இளைஞர் அணி அமைப்பாளர் கா. பாண்டியராசன், மாணவர் அணி அமைப் பாளர் கொ. குபேந்திரன், பேச்சாளர் விடுதலை ரத்தினம் உள் பட எழுபத்தி இரண்டு பேர் கைதாகி மதுரைச் சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.

அதே நாளில் கட்டபொம்மன் சிலை அருகே கைது செய்யப் பட்ட சோ. காவேரி மணியம் (முன்னுள் எம்.எல்.ஏ.) நகர் துணைச் செயலாளர் க. இசக்கி முத்து, வி.டி.சி. முதல்வர் ஜெக தீசன் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. வேலு. மு. திருமலை ராஜன், பேச்சாளர் மிசர். வையை நம்பி நகர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி லீலாவதி உள்பட ஐம்பத்தி இரண்டுபேர் மதுரைச் சிறையில் காவலில் வைக்கப்பட்டனர். o,

இந்த இரண்டு அணிகளைச் சேர்ந்த நூற்றி இருபத்தி நான்குபேர் மீதான வழக்கு விசாரணை மதுரை நீதித்துறைத் தலைமை மாஜிஸ்திரேட் பெ. தனபால் முன்னிலையில் நடந்து

124 பேரும் 38 நாட்கள் சிறையில் இருந்தனர். அவர்கள் மீதான வழக்குவிசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்தது.

107