பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்று (செவ்வாய்) மாலை அனைவரும் நீதிமன்றத்திற்குள் கொண்டு வரப்பட்டனர் மாஜிஸ்திரேட் பெ. தனபால் தீர்ப்புக் கூறினர். அதில் தி.மு க. வினர் மீது போடப்பட்ட தேசிய அவ மதிப்புத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழான குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்றும் தி.மு.க. வினர் மீதான இ.த.ச. 143, 188வது பிரிவின் கீழ் உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்காக அவர்களுக்கு ஐந்து வாரக் கடுங்காவல் தண்டனை விதித்தும் அவர்கள் அனைவரும் இந்த தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டதால் விடுதலை செய்வதாகவும் கூறினர்.

மாஜிஸ்திரேட் பெ. தனபால் தனது தீர்ப்பில் கூறி இருப்ப தாவது :

தி.மு.க.வினர் சட்ட விரோதமாகக்கூடி இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நகலை எரித்ததாகவும், அ த ன் காரணமாக இந்திய தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டப் பிரிவு 2-ன் கீழ் குற்றம் புரிந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க வினர் தங்க ளுடைய விசாரணையின்போது மேற்கண்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். எனவே, மேற்கண்ட அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 343 பாகம் 17ஐ எரித்தார்களா என்பதையே நாம் பார்க்க வேண்டும். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப் பட்ட சான்றுகள் பாதி எரிந்தும் எரியாத பேப்பர்கள் ஆகும். அரசுத்த்ரப்பில் மேற்கண்ட வாசகம் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவின் நகல்என்றும் அதை எரித்தது குற்றம் என்றும் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் பி. டி. ஆர். பழனிவேல்ராசன், பொன். முத்துராமலிங்கம்.ஆகியோர் குறிப் பிட்டதுபோல் அவைகள் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்று கூறப்படவில்லை. எனவே தி.மு.க.வினர் அதைத்தான் எரித்தார்கள் என்பதற்கு எந்தவிதமான சாட்சியமும் இல்லை. தி.மு.க.வினர் கையில் இருந்த பேப்பரை எரித்தார்கள் என்று மட்டும்தான் சாட்சி கூறியுள்ளார்.' - . . . . . .

ஆகவே தி.மு.க.வினர் இந்திய அரசியல் அமைப்புச்சட்ட 343-வது பிரிவின் கீழான நகலை எரித்தார்கள் என்று கொள்ள முடியாது. அந்த வகையில் தி.மு.க. வினர் மீது கொண்டு வரப் பட்ட இந்திய தேசிய அவமதிப்புத் தடுப்புச்சட்டப் பிரிவு 2-ன் கீழான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கொள்ள முடியாது. அவ்வாறே நானும் முடிவுக்கு வருகிறேன்.

தி.மு.க.வினர் இந்திய தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு 2-ன் கீழ்ான குற்றச் சாட்டு நிரூபிக்கப்ப்டவில்லை என்று முடிவு செய்து அப்பிரிவின் கீழ் தி. மு. க. வினரை விடுதலை செய்தும் தி மு.க. வினர்மீது கொண்டு வரப்பட்ட இ.த.ச. பிரிவு p 143 மற்றும் 188-வது பிரிவுகளின் குற்றச்சாட்டுசந்தேகத்திற்கு

108 :