பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு உத்தரவு வந்தது. அதன்படி ஒரு பெரிய டாக்டரிடம் என்னைக் கொண்டு போளுர்கள். எல்லாச் சிகிச்சைகளும் நடந்தன. எனக்குத்துணை யாரும் இல்லை. மாலையிலேயே சிறைக்குத் திரும்பி விட்டேன்.

மெடிக்கல் போர்டின் தீர்ப்பு இரண்டு வாரங்கள் வரை கிடைக்கவில்லை. மறு வெள்ளிக்கிழமை என்னைச் சந்தித்த என் குடும்பத்தார் கூறியது-"ரூபாய் ஐயாயிரம் தந்தால் உங்கள் வீட்டுக்காரரை நாளைக்கே விடுதலை செய்யவேண்டும், இல்லா விட்டால் அவர் உயிருக்கே ஆபத்து என்று எழுதுகிறேன்' என்று அந்த டாக்டர் ஒரு தரகரை என் வீட்டுக்கு அனுப்பினர். 'அதற்கு நாங்கள் இணங்கவில்லை அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது உ ண் ைம அதை எழுதினுல் போதும் அ த ற் கு எதற்காகப் பணம் தரவேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டோம் -என்ருர்கள்.

மறு வாரம் மெடிக்கல் ரிப்போர்ட் வந்தது. அதில் தென்னரசுக்கு இருதயம் நார்மலாகவே இருக்கிறது. அவர் சிறையில் நீடிப்பதால் ஆபத்துஇல்லை' என்று டாக்டர் கூறியிருந்தார். இரண்டாண்டுகளுக்குப்பிறகு அதே டாக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப் பட்டு இன்னும் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டு யிருக்கிருர். வினை விடுமா?

காலில் விழுந்த கலெக்டர்

இராமநாதபுர மாவட்டத்தில் ரெ. சுப்பிரமணியம் என்பவர் கலெக்டராக இருந்தார். எமர்சென்சி காலத்தில் கூட நியாயமாகத்தான் இருந்தார். ஆனல் ஆட்சியைக் கலைத்த அன்றே அவர் ருத்ரதாண்டவம் ஆடத்தொடங்கி விட்டார்,

தலைவர் கலைஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவர் மீதும் பொய் வழக்குப்போட்டார். தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதெல்லாம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரத்துரண்டி அவர்களைப் பதவிலியிருந்து நீக்கினர். எங்களுடைய மனைவி மக்களுக்குப் பேட்டி கொடுக்க மறுத்தார். பெரிய வழக்கறிஞர், மாநில பார் கவுன்சில்தலைவர் ராஜையா போன்றவர்களைத் தனக்கு முன்உட்காரக் கூடாது என்று கூறி நிற்கவைத்துப் பேசி ஞர். அதிகாரத்தை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தார். -

113