பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருதுநகர் எண்ணெய் வியாபாரிகளை, கவர்னர் அழைக்கிருர் என்று மதுரைக்கு அழைத்து-கலைஞர் எங்களை மிரட்டி ரூபாய் ஐந்து ல ட் ச ம் வாங்கிக் கொண்டார்-என்று எழுதிக்கொடுக்கச் சொன்னர். அவர்கள் கவர்னர் எதிரிலேயே-நாங்கள் பொய்யாக எழுதித்தர மாட்டோம்-என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டார்கள். மிசா காலம் முடிந்து வெளியில் வந்ததும் சில வியாபாரிகளும், அரசியல் வாதிகளும் கலெக்டர் மீது ஷா கமிஷனுக்குப் புகார் எழுதினர். அதுவும் விசார ணைக்கு வந்தது. ஆல்ை, கலெக்டர், அவர்களைத் தேடிப் போய் அவர்கள் காலில் விழுந்து குற்றச் சாட்டுக்களை வாபஸ் வாங்க வைத்துவிட்டார்.

உதவித் தொகை . . .

தலைவர் கலைஞருக்கு, ஒவ்வொரு கழகத்தொண்டனின்

பொருளாதார நிலை தெரியும். அந்த அடிப்படையில் மிசா வில் இருந்த பலரது குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை அனுப்பினர். சிலருக்கு அனுப்பவில்லை. அவர்களெல்லாம் என்னைத்தான் துாற்றினர்கள். அதற் கும் எனக்கும். து வரி யும் சம்பந்தமில்லை. கலைஞராக யோசித்துச் செய்த காரியம் அது. வீண்பழிகள் விலை போகாது என்பதை நானறிந்தவன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டு விவகாரம் செய்திருந் தால் இன்று அவர்கள் எனக்கு நண்பர்களாக இருந் திருக்க முடியாது.

மிசாவிலை-ஒரு லட்சம்

தேவகோட்டையைச் சேர்ந்த இராம. வெள்ளையன் இராமநாதபுர மாவட்ட் தி.மு. க. வில் மூத்தவர்களில் ஒருவர். இடைக்காலத்தில் கட்சியின் வரவு, செலவு விவ காரத்தில்ை கட்சி மேலிடம் அவர்மீது ஒழுங்கு நட வடிக்கை எடுத்திருந்தது. அவருக்கும் ஈ. வெ. கி. சம்பத் திற்கும் ரகசியத் தொடர்பு இருந்தது. இது தலைமைக்குத் தெரிந்து விட்டது. இருப்பினும் அவரும் மிசாவிற்கு வந்து விட்டார். வந்து விட்ட பிறகு என்னசெய்ய மு டி யு ம்? ஒன்ருகத்தான் இருந்தோம். அவருக்கு தினசரி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது தொழிலாகி விட்டது. கலைஞரை வீட்டிலேயே சிறைவைத்துவிட்டார்கள்.

114