பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயாளு அம்மையாரைக்கூட யாரும் பார்க்க அனுமதி கிடைப்பதில்லை' என்றெல்லாம் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம்செய்தார். ஒரு நாள் திடீரென்று வெள்ளையன் விடுதலை என்ருர்கள். நம்பமுடியவில்லை. ஒரு லட்சம் செலவு செய்து விடுதலை வாங்கியதாகப் பின்னர் தெரிந்தது. யாருக்குக் கொடுத்திருப்பார் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை! .

சோனையாவின் கனவு

கட்சியில் மூத்தவர்களில் ஒருவர் திருப்புவனம் சோணையா, அவர் திருப்புவனம் ஒன்றியப் பெருந்தலைவ ராகவும், மானமதுரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் மிசாவில் இருந்தபோது அவரது உடல் நிலைபெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த வாரம் இறுதிக் குள் அவர் கதை முடிந்துவிடும் என்கிற அளவிற்கு அவர் உடல் நொடித்துவிட்டது. * . . . .

• அண்ணே, நான் இன்னும் இரண்டு மூன்று வாரத் திற்குள் கண்ணை மூடிவிடுவேன். சாத்தூர் பாலகிருஷ் ணன் குடும்பத்திற்குப்போய் ஆறுதல் சொன்னதுபோல், கலைஞர் எங்கள் வீட்டுக்கும் வந்து எனது சவ ஊர்வலத் திலும் கல்ந்து கொள்ள ஏற்பாடு செய்யுங்கள் அதுதான் எனது கடைசி ஆசை” என்று அழுதார். சில வார்த்தை களைச் சொல்ல முடியாமல் கைசாடையால் காண்பித்தார். நான், உடன்ே சோணையாவின் உடல்நிலை பற்றியும், அவரது கடைசி விருப்பம் குறித்தும் தலைவர் கலைஞருக்கு எழுதின்ேன். ம்றுவாரத்தில் ஒரு முக்கிய நண்பர் மூலம் சோணையாவின் உடல்நிலை பற்றி, விசாரித்துக் கேட்ட றிந்து கொண்டார். அதிர்ஷ்ட வசமாக சோணையா தப்பித்துக் கொண்டார். இன்று அவருக்குத் தண்யாத ஆசை என்ன தெரியுமா? தலைவர் கலைஞர் அவர்களை அழைத்துத் தனக்கு மணி விழா நடத்த வே ண் டு ம் என்பதுதான்! பொறுங்கள்; நடத்தி விடலாம் என்று

நான் உறுதி கூறியிருக்கிறேன்.

மறைவுகள்

- கொள்கைவிரன் முத்து வடுகு TiD சுந்தரராசன். அவர் அருப்புக் கோட்டை வட்டச் செயலாளராக இருந் தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். குடும்பத்திற்கு

115