பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும் நெருக்கமர்னவர். விசுவாசத்திற்கும், எடுத்த முடிவை மாற்ருதிருக்கும் உறுதிக்கும் இலக்கணமானவர். கொஞ்ச நாட்களாக அவர் சிறையில் மெளனமாக இருந் தார். உடல் நலிந்து கொண்டே வந்தது. பெரிய மருத்து வமனைக்கு அனுப்பிப்பார்த்தோம். ஆசனவாயில் புற்று நோய் என்று தீர்ப்புக் கிடைத்தது. இறுதிவரை மனங் கலங்காமல் இருந்து விடுதலையானர். வெளியில் வந்த மறு மாதம் காலமாகி விட்டார். அவரது இறுதி ஊர்வலம் அவரது சொந்தக் கிராமமான உ ளு த் தி ம ைட யி ல் நடந்தது. ஆடவரும் பெண்டிருமாக ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள். அவருக்கு அவரது நஞ்செய் நிலத்திலேயே சமாதி அமைக்கப் பட்டிருக்கிறது.

மிசாவில் இருந்தபோது பலரது குடும்பங்களில் சாவு’கள் ஏற்பட்டன-என். தந்தையார் மறைந்தார், திரு. காதர்பாட்சாவின் தாயார் மறைந்தார், சிவகங்கை திருஞானத்தின் தாயார் மறைந்தார். வத்திராயிருப்பு செயலாளர் சொக்குவின் மகள் மறைந்தார்.

வெறியன் கயூம்

சென்னைச் சிறையில் மு. க. ஸ்டாலினையும், வீராச் சாமியையும், சிட்டிபாபுவையும் உதைத்துத்துவைத்த வெறியன் கயூம் என்கிற ஜெயிலர் மதுரைக்கு மாற்றலாகி வந்தார். வந்ததும் மிசா கைதிகளை 'மிசா நாய்கள்’ என்றே அழைத்து வந்தார். ஒருநாள் எல்லோரும் அவர் உள்ளே வந்தால் தோசைக் கரண்டியால் சாத்துவதுஎன்று முடிவை எடுத்தார்கள். மறுநாள் திட்டப்படியே கலவரம் மூண்டது. உடனே சூப்ரெண்டெண்ட் பெருமாள் தேவர் வந்து, மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட ஜெயிலருக்காக வருத்தம் தெரிவித்தார். பின்னர் அமைதி ஏற்பட்டது.

அதே ஜெயிலர், நான் வேலூருக்குப் போனபிறகு வேலூருக்கு மாற்றலாகி வந்தார். ஒரு நாள் அ வ ர் என்னைச் சிறை நூலகத்தில் சந்தித்தார். -

'பெருமாள் தேவர் ஒரு சூப்ரெண்டா? கைதிகளுக் காக மன்னிப்புக் கேட்பது மகாக் கேவ்லம்! நீங்கள் இந்த ஜெயிலை மதுரை ஜெயில் மாதிரி நினைத்து விடாதீர்கள்!' என்று உருட்டிப்பார்த்தார். . . .

í 16