பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எனக்கு எல்லாச் சிறையும் ஒன்றுதான். விதிகளுக் குக் கட்டுப்பட்டு நடந்தால் வீடும் சிறையும் ஒ ன் று தானே!' என்றேன்.

அந்த நேரத்தில் அங்கு வந்த சிறை டாக்டர் அருணு சலம் 'அவரிடம் அதிகம் பேசாதீர்கள்! மதுரையிலிருந்து வந்திருக்கும் இதயநோயாளி!' என்று சொன்னதும் கயூம் போய்விட்டார். (பெருமாள்தேவர் இன்று D.I.G. யாகப் பதவி உயர்வு பெற்றிருப்பதாக அறிந்து நாங்கள் பெரிதும் மகிழ்கிருேம்)

கலைஞரின் பேருதவி

வேலூர் சிறையில், மறக்கமுடியாத ஒரு உயிரோ வியம் உ ல வி யது, ஆம் அவர் பெயர் மாசிலாமணி அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு .ெ கா லே வழக்கில் சிக்கி, சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துத் தண்டிக்கப்பட்டவர். ஆளுல் அவர் நிரபராதி. சிறையில் அவர் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தார். தற்போது, தலைவர் கலைஞர் அவர்களின் தளராத முயற்சியால் அவர் விடு தலையடைந்து அண்ணு அறிவாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிருர்,