பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமையில் இயங்குகின்ற பார்வர்டு பிளாக் கட்சியும், தளபதி விரமணி அவர்களுடைய தலைமையில் இயங்கும் திராவிடர் கழகமும்தான் தமிழகத்திலே இருக்கின்ற தமிழர்களுக்காகத் தமிழர்களிலே பிற்படுத்தப்பட்டவர்களாக-தாழ்த்தப்பட்டவர் களாக இருக்கின்ற மக்களுக்காகப் பாடுபடக்கூடிய பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தப் பணியைத் திறம்பட நடத்துகின்ற இந்த இயக்கத்திற்கு என்னைப் போர்வாள் என்று அவர் சொன்னலும் கூட, அவர் இந்த இயக்கத்துக்கு ஒரு கேடயமாகத் திகழ்ந்து தென்பாண்டி மண்டலத்தில் இந்த இயக் கத்தை நடத்தி வருகிருர். அவருக்கு உறுதுணையாக இந்தத் தென்பாண்டி மண்டலத்திலே இருக்கின்ற தள நாயகர்கள்-தனித்தனியாக அனைவருடைய பெயரையும் குறிப்பிட நான் விரும்பவில்லை-அத்தனை பேரும் என்னுடைய இதயத்திலே இடம் பெற்றிருப்பவர்கள். அவர்களெல்லாம் இங்கே மணமக்களை வாழ்த்தியிருக்கின்ருர்கள். r

மணமகள் இளவரசிக்கு எதுவும் அதிகம் நான் சொல்லத். தேவையில்லை நன்கு படித்த பெண். தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட கணவைேடு தன்னுடைய பெற்றேர்களின் சம்மதத் தோடோ, அவர்கள் சம்மதித்தாலும், சம்மதிக்காவிட்டாலும் எனது சம்மதத்தோடு நடைபெறுகின்ற இந்த மணவிழாவில் உங்களை வாழ்த்துகின்றேன். . . ."

நீங்கள் குடும்பத்துக்கு விளக்குகளாக ஒளி விடுங்கள். நாட்டிற்குத் தொண்டர்களாகப் பணியாற்றுங்கள். தமிழினம் வாழ-தமிழ் வாழ-தமிழர்களை-தமிழினத்தை வாழவிடுவதற் கான பணிகளிலே உங்களுடைய வாழ்வையும் இணைத்துக் கொண்டு வாழ்க! வாழ்க! என்று.வாழ்த்துகின்றேன். .

129