பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணதாசனுக்கும் தேநீர் வரவழைத்துத் தந்தார். அப்போது ஒரு ஐம்பது பக்கம் உள்ள சிறிய நோட்டு புத்தகத்தை என்னிடம் கொடுத்து இது நான் எழுதிய ஒரு சிறு கதை, இதைப் படித்து விட்டு உங்களுடைய கருத்தை எனக்கு வழங்க வேண்டும் என்று சொன்னர். சென்னை செல்கின்ற வழியிலேயே நான் அதைப் படித்து முடித்தேன். -

பிறகு சென்னையில் மறைந்த தலைவர்களில் ஒருவரான என். வி. என். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தன்னுடைய திராவிடன்’ பத்திரிகைக்கு ஒரு துணை ஆசிரியர் தேவை என்பதை என்னிடம் சொன்னர். -

நான் இவரை அவருக்கு அடையாளம் காட்டி தென்னர் சோடு தொடர்பு கொண்டு அவரை சென்னைக்கு வரச்சொல்லி 'திராவிடன் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கே பணி புரிகின்ற வாய்ப்பைப் பெற்ருர். அதன்பிறகு முரசொலியில் பணியாற்றினர்.

சிந்தாமணி என்கிற பெயரை மாற்ற வேண்டும் என்கின்ற ஆர்வத்தை என்னிடம் அவர் வெளியிட்டபோது தென் பகுதிக், கெல்லாம் ஒரு காலத்தில் அவர் அரசாக வருவார் என்று நான் எண்ணிய காரணத்தால் அன்றைக்கே அவருக்கு தென்னரசு என்ற பெயரை நான்தான் சூட்டினேன். அந்தத் தென்னரசின் ஆட்சி இன்றைக்குக் கழக நண்பர்களுடைய உள்ளத்தில் எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கின்றது-ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை இந்த மாமன்றத்திலே என்னல் உணர முடிகின்றது. பெற்ற பொழுதினும் பெரிதுவக்கும் என்பதற்கொப்ப நான், அன்றைக்கு திருக்கோட்டியூர் தெருவிலே தென்னரசைக் கண்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இன்றைக்குப் பல ஆயிரம், மடங்கு அதிக மகிழ்ச்சியைப் பெறுகின்றேன்.

நெல்லைச் சீமை தொட்டு தஞ்சைத் தரணி வரையிலே, இந்த வட்டாரத்திலே இருக்கின்ற கழகத்தின் தளகர்த்தர்களா லுைம் அல்லது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே வாழ்கின்ற, இயக்கத்தை நடத்திச் செல்கின்ற தளகர்த்தர்களானலும் அவர் கள் எல்லாம் தென்னரசை உணர்வார்கள். அறிவார்கள், அவ ருடைய உயர்வை எண்ணி மகிழ்வார்கள். அவருடைய உறுதியை எண்ணிப் பூரிப்பார்கள். அத்தகைய தளகர்த்தர்கள் எல்லாம் பூரிக்கின்ற நேரத்தில், அவர்களால் தலைவஞக உரு வாக்கப்பட்ட நான் எவ்வளவு புளகாங்கிதம் அடைவேன்." பூரிப்புக் கொள்வேன் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

131.