பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தகைய உடன்பிறப்பைப் பெற்றிருக்கிருேம் என்பதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து கொண்டிருப்பவன். அவர் தன்னுடைய மூத்த மகள் இளவரசிக்குத் திருமணம் நடத்தி வைத்து அதற்கும் நானே தலைமையேற்று இன்றைக்கு இங்கே அவருடையஅடுத்தமகள் தமயந்தி நாச்சியாரின் திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பினை எனக்கு வழங்கியுள்ளார். அவருடைய திருமணத்தையே நான்தான் 1963ஆம் ஆண்டு நடத்தி வைத்தேன். இப்போது அவருடைய மகள்களின் திருமணத்தையும் நான்தான் நடத்தி வைக்கின்றேன். எனக் கொரு ஆசை. அவருடைய பேரன், பேத்திகளின் திருமணத்தையும் நான் மாத்திரமல்ல, இங்கே வந்திருக்கின்ற நாங்கள் எல்லாம் வந்து வாழ்த்துக்களை வழங்க வேண்டுமென்று ஆசை. (கை தட்டல்) அதைத் தென்னரக் ரேகை பார்த்துத்தான் சொல்லவேண்டும் என்று துரைமுருகன் கூறக்கூடும். -

தென்னரசு வேலூர் சிறைச்சாலையிலே ரேகை பார்த்ததாக துரைமுருகன் சொன்னர். அங்கே அவர் ரேகை பார்த்ததற்கு ஒரு காரணம் உண்டு. நான்தான் அங்கே அவரை ரேகை பார்க்கச் ச்ொன்னேன். ஆனல் எனக்கும் ரேகையில் நம்பிக்கை கிடையாது. தென்னரசுவுக்கும் ரேகையிலே நம்பிக்கை கிடையாது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களே கூட இந்த ரேகை, ஜோஸ்யம், ஜாதகம் இவைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஆழமாகச் சொல்லியிருக்கின்ருர்,

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்தை, பேரறிஞர் அண்ணு அவர்களுடைய கருத்தை சுயமரியாதை இயக்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்ற கருத்தை ஏற்றுக் கொண்டு அந்த அடிப்படையில்தான் இன்றைக்குத் திருமணம் நடக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் ரேகை சாஸ்திரத்திலே எனக்கும் தென்னரசுவிற்கும் நம் பி க் ைக இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனல் நான் ஒன்றை ஒளிக் காமல் சொல்லவேண்டும். திராவிட் முன்னேற்றக் கழகத்திலே உள்ள சில பேருக்கு அந்த நம்பிக்கை இருக்கின்றது. நான் மறுக்க வில்லை. -

தி. மு. கழகத்திலே உள்ள அத்தனைபேரும் சுயமரியாதைக்' காரர்கள் அல்லர். சுயமரியாதை உள்ளவர்கள். ஆ ைல் சுயமரியாதைக் கொள்கையில் தங்களை முழுக்க ஈடுபடுத்திக் கொண்டவர்கள் அல்ல. ஏனென்ருல் தி.மு. கழகம் ஒரு அரசியல் இயக்கமாக இன்றைக்குப் பரிமை வளர்ச்சி பெற்றிருக்கின்ற காரணத்தால் - தம்பிமாறன் இங்கே குறிப்பிட்டதைப் போல

132.