பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கவேலன் பேசும்போது என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நம்முடைய குடும்பத்திலே நடைபெறுகின்ற திருமணம் என்று சொன்னர். அரசியலைப் பொறுத்தவரை நீங்கள் - நாங்கள் என்று இருந்தாலுங் கூட, தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த வரை நாம்தான், அதை நீங்கள் உணர்ந்து கொண்டால் சரி. நீங்கள் ஏற்றுக் கொண்டால் சரி, தமிழர்கள், தமிழ் இன மக்கள் தமிழ் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழ் நாட்டு உரிமைகளைப் பெறக் கூடியவர்கள் நாம்.

பத்திரிகையிலே இன்று கூடப் படித்தேன். ஒரு மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிருர், கருணுநிதியின் தமிழ்ப்பற்று என்ன ஆயிற்று என்று கேட்டிருக்கிருர். எனக்குக் கோபம் வர வில்லை. மகிழ்ச்சிதான், எனக்குத் தமிழ்ப் பற்று இருந்ததை ஒப்புக்கொண்டுதானே, அது என்னவாயிற்று என்று கேட்டி ருக்கிருர், இதுவரையிலே எனக்குத் தமிழ்ப்பற்றே இல்லை என்று சொன்னவர்கள் - கருணுநிதிக்குத் தமிழ்ப்பற்றே கிடையாது என்று சொன்னவர்கள் - தமிழ்ப்பற்று என்னவாயிற்று என்று கேட்டிருக்கின்ருர்கள் என்ருல் அதற்கு என்ன அர்த்தம்? அது இருந்ததாகத்தான் அர்த்தம். ஆகவே அது ஏ ற் க னவே என்னிடம் இருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கின்ருர்கள், அதற்கு எந்த ஆபத்தும் வராது. -

என்னுடைய தமிழ்ப் பற்று காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து கூட்டணியாகச் செயல்பட்டபோதே கெடவில்லை என்ருல் இப் போது தமிழ்ப்பற்றுக் கெட்டுப் போய்விடும் என்று யாரும் எதிர் பார்க்கத் தேவையில்லை. அந்தப்பற்று வளரும் - அந்தப் பற்று வளர-ஆர்வம் வளர - வென்றிட, தென்னரசைப் போன்ற கழகத்தின் தளகர்த்தர்கள் எனக்கும் கழகத்திற்கும் என்றென்றும் துணை யாக இருப்பார்கள். அந்தக் குடும்பத்தின் குல விளக்குகள் தமயந்தியும் அருணுசலமும் வாழ்க வாழ்க என்று மீண்டும் ஒரு முறை வாழ்த்துகின்றேன். . ‘. .

136