பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ്ജ്ജ്

இன்முதர்கள%

சிறைவாசம் எனக்கு முதற்களமாக அமைந்தது 1962-ம் ஆண்டுதான். தலைச்சுமையை விட மனச்சுமை கனமானவை என்பதை உணர்ந்த வருடம் அது.

1962-ல் எனக்குத் திருமணம் ஆகவில்லை. காங்கிரஸ் ஆட்சி கொடுகட்டிப் பறந்த காலம் அது. நாட்டில் விலைவாசி உயர்வை மாகாண ஆட்சியால் தடுக்க முடியவில்லை. எல்லாத் தரப்பிலும் விலைவாசி உயர்வைப் பற்றி விமர்சனம் கடுமை யாக இருத்தது. இதற்கு காமராஜர் முதல் சாதாரண காங் கிரஸ் தொண்டர்வரை பொறுப்பான பதிலைச் சொல்லவில்லை.

'விலைவாசியைத் தடுக்கக்கூடிய அதிகாரம் மாகாண சர்க்காருக்கு இல்லை. அது மத்திய சர்க்காரைச் சார்ந்தது' என்று காமராஜர் முதல் அனைத்துத் தலைவர்களும் பதில் சொல்லிவிட்டார்கள். பொதுமக்களைத் திரட்டுவதற்கு ஒரே வழி விலைவாசி உயர்வைக் கண்டித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் முன்பாக மறியல் செய்வதுதான் என்று தி. மு.க. தீர்மானித்தது. அந்த முடிவின்படி ஜூலை மாதம் 15-ந் தேதி கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில்

மறியல் போராட்டம் தொடங்கியது. - -

மதுரை மாநகரில் பேராசியர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மறியல் செய்யவேண்டுமென்று தி.மு.க. தலைமை உத்தரவு இட்டது. மதுரை, இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் ஒரே காம்பவுண்டுக் குள் இருந்ததால் இரண்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் களும் மதுரையிலேயே மறியல் செய்ய நேர்ந்தது. பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மதுரை தி. மு.க. அலுவல கத்திலிருந்து வடக்குமாசிவீதி வழியாக ஊர்வலமாக வந்து சரியாகக் காலை 10 மணிக்கு மாவட்டஆட்சியாளர் அலுவலகம் முன்பாக மறியல் செய்தோம். ஏ ரீாள ம்ான போலீசார் பந்தோப்ஸ்துக்குவந்திருந்தார்கள். நாங்கள் மறியலை சுண்க்க மில்லாமல் நிறை : * :