பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மூவரும் மறியல் போரில் கைதான முக்கியஸ்தர்கள். டி. ஐ. ஜி. ஷெய்ை ஸ்தலத்திலேயே வந்திருந்து எங்களைக் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தார். நீதிபதி மாலை 4 மணியளவில் எங்களை 15 நாள் காவலில் வைக்கும்படியும், அதன் பிறகு நீதிமன்றத் திற்குக் கொண்டுவரும்படியும் உத்தரவு இட்டார்.

இரவு 7மணி அளவில் நாங்கள் சிறைச்சாலைக்குள் நுழைந் தோம் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்து சிறை நிறைந்து வழிந்தோடும் வகையில் தொண்டர்கள் குவிந்திருந்தார்கள். எங்களுக்குச் சாப்பாடு போடுவதற்குச் சிறையில் வசதியில்லை. இரவு 8 மணிக்கெல்லாம் எங்கள் எண்ணிக்கை நான்காயிரத் தைத் தாண்டிவிட்டது. இரவில் நாங்கள் யாரும் சாப்பிட வில்லை. மறுநாள் காலை 11 மணியளவில் உப்புமா என்ற பெயரால் அரைவேக்காடோடு கொஞ்சம் உணவு கொடுத்தார் கள். பாத்திரம் இல்லாததால் எல்லோரும் வரிசையில் நின்று கையிலேயே ஏந்தி வாங்கிச் சாப்பிட நேர்ந்தது.

மறுநாள் நீதிபதி சூரியமூர்த்தி அவர்கள் நீதிமன்றத் தையே சிறைச்சாலைக்குக் கொண்டுவந்து விட்டார். அதுவரை

அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததில்லை. ஏற்கெனவே

சிறையில் அடைபட்டிருக்கின்ற நான்காயிரம் பேரை வேறு பல சிறைகளுக்கு மாற்றுவதற்கான நீதிபதி சிறைச்சாலைக்கு வந்திருந்து கும்பல் கும்ப லாக எங்களைப்பிரித்து சிலரை திருச்சி சிறைச்சாலைக்கும், சிலரை புதுக்கோட்டை சிறைச்சாலைக்கும் மாற்றிவிட்டார்கள். அதில் பேராசிரியர் அ ன் ப.ழ க ன் அவர்கள், நான், மதுரை எஸ். முத்து அவர்கள், காவேரி மணியம் அவர்கள், ஆழ்வார்புரம் ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டோம்.

.திருச்சி சிறைச்சாலை, மதுரை சிறைச்சாலையைப் போல் நான்கு மடங்கு பெரியது. அதே சிறைச்சாலையில் கலைஞர் அவர்களும், மன்ன நாராயணசாமி அவர்கள் அன்பில் தருமலிங்கம் அவர்கள் போன்ற முன்னணித் தலைவர்களும் அடைபட்டிருந்தார்கள். ஆகவே எனக்கும் பொழுது போவது கஷ்டமாகத் தெரியவில்லை. - என் வாழ்க்கையில் முதன்முறையாகக் கைதி உடையில் கலைஞரை சந்தித்தது அந்தக் காலக்கட்டத்தில்தான். -

வாரம் ஒரு முறை அதிகாரிகள் வருமுன் எல்லாக் கைதி களும் சிறை உடை உடுத்தி வரிசையில் நிற்க வேண்டும். அதிகாரிகள் அணிவகுத்து வந்து அவர்களைப் பார்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்து கொள்வார்கள். அப்போதுதான்

\