பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இத்தனை கலைகளிலும் அவர் சித்தராய் விளங்கினர். -

இவரது கன்னி முயற்சியில் உருவான தேவாலயம்’ என்ற நாடகம் 1956லேயே அறிஞர் அண்ணு அவர்களால் பாராட்டுப் பெற்றது.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் தளபதி’ என்ற நாடகத்தை நீண்ட நாட்கள் நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு அடுத்து நடத்துவதற்கு ஒரு நல்ல நாடகம் எழுதித் தருமாறு நண்பர் ஒருவர் மூலம் தென்னரசு அவர்களுக்குச் சொல்லி அனுப்பினர். கலைவாணர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தென்னரசு அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் * தலைநகரம்’ என்ற நாடகம். அது நூல் வடிவிலும் வெளி வந்துள்ளது. , -

"என் தொடர்கதைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே தென்னரசு எழுத்துக்கும் மக்களிட்ையே மரியாதை இருக்கிறது என்று கவியரசர் கண்ணதாசன் மனம் திறந்து பாராட்டுவார், - - ~. எழுதுவதற்கு இவர் பிரசவ வேதனையை உண்டாக்கிக் கொள்வது கிடையாது. ஆற்றுமணலைக் கீறிக்கிளம்பும் ஊற்றுப் பெருக்கு இவரது சிந்தனே! ... " - * * * கவிஞர் கண்ணதாசன் திரைப்படத்துறையில் வளர்ந்து வந்த காலத்தில் திரைக்கதை அமைப்புக் கலந்துரையாடலில் தென்னரசுவுக்கு முதலிடம் தருவார். -

எப்போதும் இவரைச்சுற்றி அறிவார்ந்த கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இன்றைக்கும் அது தொடர்கிறது எனில் இவருடைய அரசியல் வளர்ச்சி மட்டும் காரணமல்ல1957 லேயே ஒரு நந்தவனம் போன்று இவரைச் சுற்றிபல்வேறு வகை நண்பர்கள் மொய்த்துக் கிடப்பர்.

பூமியில் கிடந்த தென்னரசு எனும் உலோகத்தை தங்க ஆபரணமாக உருவாக்கிய பெருமையும் - தி. மு. கழகத்தின் தூண்களில் ஒருவராக்கிய சிறப்பும் தலைவர் கலைஞர் அவர்களை மட்டுமே சேரும். . . .

இளைய பருவத்தில் சிந்தாமணி’ என்ற ப்ெயரை தென்னரசு எனமாற்றியவர் கலைஞர்தான். இவருக்கு சின்ன மருது என்று வரலாற்றுப் பட்டத்தை வழங்கியவரும் தலைவர் கலைஞர்தான். சிறுகதை மன்னன் எனச் சிறப்பித்துக் கூறிய வரும் கலைஞர்தான்! இவருக்கு இயற்செல்வம் என்கிற பட்டத்தை வழங்கி வாழ்த்தியவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான.

5