பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசும்பொன் மாவட்டம் திருப்பத்துார் தொகுதியில் ஒரு நன்றி மறவாத் சட்டமன்ற உறுப்பினர்ைத்தென்னரசு வடிவில் உண்டாக்கிக் கொடுத்த பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சாரும். - - -

மாணவப் பருவத்திலிருந்து மணிவிழா வயதுவரை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் துளிர்விட்டுத் தளத்த தென்னரசு அவர்களின் வளர்ச்சிக்கு கலைஞர் அவர்களின் குளிர்பார்வையும் அரவணைப்புமே காரணங்கள். -- - -

திரு. தென்னரசு அவர்களுக்கு அறிஞர் அண்ணு குல தெய்வம்! கலைஞர் அவர்கள் குடும்ப தெய்வம்; குடும்பத்தின் காவல் தெய்வம்

நாடக உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த ஒளவை டி. கே. சண்முகம் அவர்கள் தென்னரசை அழைத்து சரித்திர நாடகம் எழுதித் தருமாறு கேட்டார். தென்னரசு அவர்களும் துங்கபத்திரை என்கிற தலைப்புக் கொடுத்து நாடகத்தின் கதையை விளக்கிக் கூறினர். கதையில் வரும் கிளேமாக்ஸ் காட்சியின் உத்தி ஒளவை டி. கே. எஸ். அவர்களின் உள்ளத்தை உலுக்கி விட்டது. தென்னரசை வெகுவாகப் பாராட்டிஞர். வெகுசீக்கிரத்தில் நாடகத் தை எழுதித் தாருங்கள், இந்த நாடகம் எங்கள் கம்பெனிக்கு வெற்றி நாட்க் மாக அமையும் என்று பணித்தார்.

அந்த நேரம் தென்றல் வார இதழில் இவர் எழுதிக் கொண்டிருந்த தொடர்கதையும், இயக்கப்பணியும் தொடர்ச்சி யாக அமைந்து நாடகம் எழுத் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர்தான் டி.கே. எஸ். அவர்கள் ராஜ ராஜசோழன்' நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினர் என்பது தமிழகத் திற்குச் சொல்ல வேண்டிய புதிய செய்தி

தென்னரசு அவர்கள் கற்பனைக் கதைகளுக்கு வடிவம் கொடுப்புதைவிட நடந்த கதைகளுக்கு உயிர் கொடுப்பதையே விரும்புவார். "

வியக்கும்படியான நடந்த சம்பவங்களை நண்பர்கள் கூறி ஞல், செவியில் அதனை வாங்கிக் கொள்வார். அதற்குரிய முகாந்திரங்களை, தடயங்களை சிரமப்பட்டுச் சேகரிப்பரர். இதில் அவருக்கு முழுத்திருப்தி ஏற்பட்டபிறகு-மூலக் கருவின் முகம் சிதையாமல் நாவல் படைப்புதில் ஆ ற் ற ல் மிகுத்தவர் தென்னரசு. -

இவர் எழுதிய நாவல்களில் நூற்றுக்கு நூறு, நடந்த சம்பவங்களின் பின்னணியே மையக் கருத்தாக இருக்கும்.