பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: இல்லை, இது சுதேசி' என்றேன்.

சுதேசி என்ருல்-? "அந்தக் காலத்தில் காங்கிரஸ்காரர்கள் அயல் நாட்டுப் பொருள், சுதேசிப்பொருள் என்று சொல்லிக் கொண்டது தங் களுக்குக் கவனமில்லையா? நம் நாட்டில் நாமே தயாரித்துக் கொள்வதற்குச் சுதேசிப் பொருள் என்பது அவர்கள் கூற்று. அதுபோல் இந்தத் தீப்பெட்டி நானே தயாரித்துக் கொண்டது” என்றேன்! - -

அதன்பின் அவர் அவரது குற்றச்சாட்டில், 'அண்ணு துரையின் படம் போட்ட நெருப்புப்பெட்டி தென்னரசுவிட மிருந்து கைப்பற்றப்பட்டது என்று குறித்துக்கொண்டார்.

தலத்திலிருந்து போலிஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுவரப் பட்டேன். எனக்குப் பின்னே பெருந்திரள்! இரவு 7 மணிவரை அந்தக் கூட்டம் ஸ்டேஷனைச் சுற்றித் தேங்கி நின்றது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் கரைந்துவிட்டது. நான் ஸ்டேஷனி லேயே படுத்துவிட்டேன். சப்ஜெயில் நாற்றத்தை அனுபவிக்க விடாமல் என்னைப் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்கவைத்த போலீசாரை நான் வாழ்த்திக் கொண்டே படுத்தேன். படுத் தேனே தவிர தூங்கவில்லை. -

7-9-64

மறுநாள் காலை 10 மணியளவில் தேவகோட்டையிலுள்ள ஜில்லா மாஜிஸ்டிரேட் முன் என்னை ஆஜர்படுத்தினர்கள். நீதிபதி ராஜரத்தினம் (பிள்ளை) அவர்கள் 11 மணிக்கு உன்னத மான அவர் இருக்கைக்கு வந்தார். சந்தேகப்பேர்வழிகள், தெருவில் சிறுநீர் கழித்தவர்கள் முதலியவர்களையெல்லாம் நீதிபதி விடுதலை, விடுதலை என்று கட்டவிழ்த்து விட்டார். என்னைப் போலவே திருவாடானையில் அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவுக்குத் தீயிட்ட நண்பர் நவமார்க்கண்டேயன நீதிபதி விசாரித்தார். அடுத்தகணமே அவருக்கு ஒன்பது மாதக் கடுங்காவல் என்று தீர்ப்பும் கூறிவிட்டார். கூடியிருந்த கழகத் தோழர்கள் பெருமூச்சுவிடத்தான் செய்தார்கள். அதற்கு முன், மதுரை முத்து குழுவினருக்குத்தான் ஒரு வருடக் கடுங்காவல் விதிக்கப் பட்டிருந்தது. அதற்குப் பிறகு எந்த மாவட்டத்தின ருக்கும் ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை தரப்படவில்லை. ஒன்பது மாதம் என்று வந்தது நவமார்க்கண்டேயனுக்குத்தான்.

என் முறை வந்தது. நான் எழுந்து நின்று என் வாக்கு மூலத்தைச் சொன்னேன். நான் எவ்வளவு உற்சாகத்தோடு பேசினேனே அதைவிடப் பதின் மடங்கு மகிழ்ச்சியுடன் அவர்

12