பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் ஊர்வலம்! பல ஊர்வலங்களை ஏற்பாடு செய்திருக்கி றேன். பல ஊர்வலங்களில்-குறிப்பாக சென்னையில் கோஷம் போட்டு அணிவகுத்துப் போயிருக்கிறேன். மாலை சூட்டி நான் அழைத்து வரப்பட்ட முதல் ஊர்வலம் அதுதான் ! என் கல்யாண ஊர்வலத்தைக்கூட என் குணமறிந்த என் பெற்ருேர் களும், நண்பர்களும் ரத்து செய்து விட்டார்கள்.

4-20க்கு நான் காந்தி சிலைக்கு முன்னல் வந்தேன். போலி சாரால் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுவிட்டது. வேக் மாக ஓடிவரும் ஆற்று நீரைத் தடுத்தால் எப்படித் தண்ணிர் மகிழ்ந்து உடைப்பு எடுக்குமோ அதுபோல் கூட்டம் நிறைந்து நெருக்கடியை உருவாக்கியது. தேவகோட்டையிலிருந்து மதுரைபோகும் கார்கள்-மதுரையிலிருந்து காரைக்குடி, புதுக் கோட்டை செல்லும் கார்கள் இருதிசைகளிலும் வரிசை வகுத்து நின்றன. - -

நான் சட்டத்தை எரிப்பதற்கு ஆயத்தமானேன். 'அண்ணு வாழ்க இந்தி ஒழிக!' என்ற உணர்ச்சி முழக்கத்திற்குப் பிறகு தீப்பெட்டியை எடுத்தேன். போலீஸ் அதிகாரிகள் தயாரானர் கள். ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு வாளியில் தண்ணீருடன் ஒரு கான்ஸ்டபிள், மூவரும் என்னைச் சூழ்ந்து நின்ருர்கள். - - -

“எதற்கு சார் தண்ணிர்?' என்று கேட்டேன்.

நாங்கள் எரியும் சட்டத்தை எப்படி அணப்பது? காலில் போட்டு மிதித்தால், நாங்களாவ்து சட்டத்தைக் கொளுத்திைேம். இந்தப் போலீஸ் அதிகாரிகள் பூட்ஸ் காலால் சட்டத்தை மிதிக்கிருர்களே அது சட்டத்திற்கு அவமதிப்பு இல்லையா' என்று உங்கள் எம்.எல்.ஏ. க்கள் சட்டசபையில் பேசுவார்களே அதற்காகத்தான் வாளியில் தண்ணீர்' என்ருர் அதிகாரிகளில் ஒருவர். சட்டமன்றப் பேச்சுக்கும் ஏதோ சக்தி யிருக்கிறதென்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.

4-25க்கு நான் சட்டத்திற்கு நெருப்புவைத்து விட்டேன். திட்டமிட்டபடி கடமையைச் செய்தேன். போலீசாரும் அவர் களது சடங்குகளை கிடுகிடு வென்று நடத்தினர்கள். என்னிட மிருந்த மாலைகளும், ஒரு நெருப்புப் பெட்டியும், கழகக் கொடி யும் அவர்களால் கைப்பற்றப்பட்டன. அப்போது சர்க்கிள் லேசாகச் சிரித்தார். -

என்ன சிரிக்கிறீர்கள்?' என்றேன். -

இப்படியும் தீப்பெட்டிகள் வருவதுண்டா?’ என்ருர்

அவா. - - - - -

11