பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவை முதன் முறையாக 1963 நவம்பரில், சென்னையில் அறிஞர் அண்ணு அவர்கள் எரிப்பதாக எங்களது திட்டம். அதன்படி அண்ணு அவர்கள் குறிப்பிட்ட தினத்தன்று கைது செய்யப்பட்டார். அதை யொட்டி தமிழ் நாட்டிலுள்ள தி.மு.க முன்னேடிகள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் 151வது பிரிவுப்படி கைது செய்யப் பட்டார்கள். அந்த நேரத்தில் காலை 8 மணியளவில் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது வழி மறித்து நான் கைது செய்யப்பட்டேன். கைது செய்த போலீஸ் அதிகாரி என்னை எனது இல்லத்திற்குப் போலீஸ் லாரியில் கொண்டு வந்தார். வீட்டில் பெரும் கூக்குரல்! அப்போது திருமணமான மறுமாதம்! இப்போதோ குழந்தை பிறந்த மறுமாதம் இன்னும் இரண்டு முறை இப்படி போலீஸ் வருவதும் போவதுமாக இருந்தால், வீட்டில், பெண்களுக்கு உள்ளம் மரமரத்துப்போகும்!

நான் ஊரைவிட்டு பஸ்ஸில்தான் புறப்பட்டேன். என்னு டன் மதுரை வட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி. எஸ். மணியம் உட்பட பதினேழு பேர் பஸ்ஸில் ஏறினர்கள். பஸ் பாதித்துாரம் வந்ததும் எதிரே ஒரு தனிக்காரில் வந்த நண்பர்கள் மாதவன், எம் எல்.ஏ., காடு வெட்டி தியாகராசன் எம்.எல்.ஏ. இருவரும் பஸ்ஸை நிறுத்தி என்னை அவர்களது காரில் ஏற்றிக் கொண் டார்கள். இரண்டு கார்களும் முன்னும் பின்னுமாக திருப்பத் துாருக்குள் நுழைந்தன. நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காந்தி சிலையைச் சுற்றி போலீசார் முற்றுகையிட்டிருந்தனர். எனக்குக்கூட ஒரு சந்தேகம் - நாம் சட்டத்தை எரிக்கப்போவதாகத்தானே அறிவித்திருக்கிருேம், காந்தி சிலையைத் தூக்கிக் கொண்டுபோகப் போவதாக அறிவிக்கவில்லையே - என்று போலீசாரின் இதுபோன்ற 'தேவையில்லாத நடவடிக்கைகள் தான் சிலவேளைகளில் எதிர்க்கட்சிகளுக்குப் புகழைக் கொடுத்து விடுகின்றன!

மாலை 4 மணியளவில் நான் நகரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டேன். தோழர்கள் மாதவன் எம்.எல்.ஏ. காடு வெட்டி தியாகராசன் எம்.எல்.ஏ.,உட்பட இரண்டாயிரம் தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தார்கள். நூறு சைக்கிள்கள் ஊர்வ லத்திற்கு முன்னே அணிவகுத்துச் சென்றன. தெருவில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர்கள். மாலேகளை அணிவித்தார்கள். உணர்ச்சி பெருதவர்கள் என்னைப் பலிகடா என்று கருதி பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர் களுக்காக ஊர்வலம் பரிதாபப்பட்டது அமைதி, அடக்கம், எதற்கும் ஐயுறும் மனப்பான்மை, கொண்ட நான் அன்றைய ஊர்வலத்தில் கம்பீரமாகத்தான் நடந்தேன். அதுதான் எனக்கு

10