பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6-8-64

செப்டம்பர் திங்கள் என்ருல் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரியார் பிறந்தது. தி. மு. க. பிறந்தது, அண்ணு பிறந்தது எல்லாமே செப்டம்பர் திங்களில்தான்! தி.மு.க. தலைமை அதே செப்டம்பர் திங்களில் அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவை எரிக்க அனுமதித்தது, எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

6-9-64 ஆம் தேதி நான் சட்டத்தை எரிக்க வேண்டிய நாள். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எனது இல்லத்தைச் சோகம் கவ்விக் கொண்டு விட்டது. தம்பிக்குக் கருவாட்டுக் குழம்பு வைத்துக் கொடுங்கள்; தம்பிக்கு மீன்வருவல் செய்து போடுங்கள்; கோழிச் சூப்புப் போடுங்கள்’’ என்று எனது அன்னையார் வீட்டில் உத்தரவு மேல் உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டுவந்தார்கள். அந்தக் கட்டத்தில் நான் சாப்பிட்ட உணவுகளை நினைத்தால் அடிக்கடி சிறைக்குப்போகலாம் போல் தோன்றியது. அடேயப்பா என்ன சாப்பாடு, என்ன விருந்து அதுவும் சொந்த வீட்டில்!

செப்டம்பர் 6ஆம் தேதி பகல் இரண்டு மணிக்கு திருக் கோட்டியூரை விட்டுப் புறப்பட்டேன். திருப்புத்துர் காந்தி சிலைக்கு முன்னல் மாலை 4 மணிக்கு நான் சட்ட எரிப்பு நடத்து வதாக ஏற்பாடு. என் வீட்டில் எல்லோரும் கண்கலங்கி நின்ருர்கள். எனது மனைவி அழத்தொடங்கி ஒரு கிழமையாகி விட்டது. அன்று அவளுக்கு உச்சக்கட்ட சோகம்! கையிலே ஒரு மாதக் குழந்தை! குழந்தைக்குப் பெயர் கூட வைக்காமல் போகிறேனே என்ற கோபம் வேறு பெண்கள் எடுத்ததற்கெல் லாம் அழுததால்தான் அவர்களின் கண்ணிருக்கு மதிப்புக் குறைந்து விட்டது. கணவன் திரை கடல் தாண்டி திரவியம் திரட்டப் போனலும் அழுது புலம்பக்கூடியவர்களாயிற்றே அவர்கள் சிறைக்கு-அதுவும் நாள் வைத்துப் போகும் போது அழாமல் இருப்பார்களா? எனது குடும்பம் இது போன்ற 'அரசியல் ரகளை களை அடிக்கடி மென்று விழுங்க வேண்டு மென்பதுதான் எனது ஆசை .