பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமைப்பொழுதும் ஒய்வில்லாத-இடையருத பணிகளுக் கிடையே இந்நூலினைப்படித்து அணிந்துரை தந்து நூலின் மதிப்புக்குக் கீர்த்தி மகுடம் சூட்டியுள்ளார் தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் எழுதியுள்ள இருபது வரிகள் தென்னரசு அவர்களை இறுக அணைத்துக் கொண்டிருப்பது அறிந்து பூரித்துப்போனேன். கலைஞர் அவர்களின் தாயுள்ளத்திற்குத் தலை வணங்குகிறேன்.

பேராசிரியர் பெருந்தகை அவர்கள்-தென்னரசு அவர்களின் தியாகத் தழும்பை, அவரது எழுத்தின் சக்தியை, அவர் தலைவர் அவர்களிடம் கொண்டுள்ள நட்பின் தொன்மையை எழுதிக்காட்டியுள்ளார் என்பதைவிட, பேணு எனும் தூரிகையால் வரைந்து காட்டியுள்ளார் என்பதே பொருந்தும். அந்த இலக்கிய நெஞ்சத்திற்கு இருகரம் கூப்புகிறேன். . .

மிருதுவான வார்த்தைகளைப் பயன்படுத்து, ஆளுல் வாதங்கள் கடுமையாக இருக்கட்டும்' இவ்வாறு மேலைநாட்டு அறிஞர்களின் சிந்தனைக் குறிப்புகளோடு பெண்ணில்லாத ஊரிலே’ நூ லி ன் சிறப் ைப நாஞ்சிலாருக்கே உரிய நயமிகு, நளினமிகு சொற்களால் பாராட்டியிருக்கிருர், நா ஞ் சி லார் அவர்களுக்கும், தென்னரசு அவர்களுக்கும் உள்ள நட்பின் நெருக்கத்தை எழுத்துமுத்துக்களால் மாலையாக்கி தென்னரசு கழுத்தில் அணிவித்திருக்கிருர் மரியாதைக்குரிய நாஞ்சிலார்.

பெண்ணில்லாத ஊரிலே வரலாற்றுக் குறிப்பை நூலாக வெளியிடுவதற்கு சகோதரர் தென்னரசு அவர்களிடம் அனுமதி கேட்டதும் அகமும் முகமும் மலர ஒப்புதல் தந்தமைக்கு நன்றி சொன்னல் அது சகோதரத்தன்மையைப் பிரித்துக் காட்டும் என்பதால், அந்தப் பெருந்தன்மையை பெருமையாகக் கருதுகிறேன்.

கலைவளத்தோ கப்போவியம் தீட்டித் தந்த ஒவியர் சீனி.சோமு, ಘೀ கிே : செல்லப்பன், மேலட்டையை அழகுற அச்சிட்டு வழங்கிய கனரா பிரிண்டர்ஸ் ஆகியோருக்கும்- `

இந்நூல் சிறப்பாக வெளிவருவதற்கு அனைத்துவகையிலும் உடனிருந்து ஒத்துழைத்த அரு ைம நண்பர்களுக்கும், அருண் அச்சகத்தின் சி.வி. சுப்பிரமணியம், பி. சத்தியமூர்த்தி, எஸ். மரியதாஸ் ஆகியோருக்கும் திருமாறன் நிலையத்தின் சார்பாக நன்றியினை இதயத்திலிருந்து எடுத்து வைக்கிறேன்.

- - - அன்புடன்,

கயல் தினகரன்