பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு எவ்வளவு?’’

ஒரு வருடம்

ஓ மை காட் ஒன் இயர்!’

-டில்லி பாராளுமன்றத்தில் கம்பீரமாக ஒலிக்கும் வெண் கலக்குரல் - சிறைக்கோட்டத்திற்குள்ளிருந்து ஒலித்தது. ஆம்; நாஞ்சில் மனேகரன் எம் ஏ., எம்.பி. அவர்களும் நானும்தான் மேலே கண்டுள்ள உரையாடலை நடத்திளுேம். அவருக்குப் பக்கத்தில் குமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பி. எம். கண்ணு இருந்தார். அவருக்கு ஆறுமாதக் கடுங்காவல்; மனேகரனுக்கு ஆறுவாரக் கடுங்காவல்!

"நாம் எங்கிருக்கிருேம்? நாம் காண்பது கனவா, நினை வா?' என்று சினிமாக்களில் தான் வசனம் கேட்டிருக்கிருேம். அப்போதெல்லாம் அந்தக் கட்டம் போர் அடிப்பது போல் தோன்றும். ஆல்ை உண்மை வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டம் வரும்போதுதான் அந்த வசனத்தின் உயிர் தெரிகிறது. சிறையில் "முதல் இரவை’க் கழித்து விழிக்கும்போது எனக்கு அந்தச் சினிமா வசனம்தான் நினைவில் எழுந்தது. -

8-9-64

காலை ஆறு மணிக்கு எழுந்தேன். அக்கம் பக்கத்திலிருந்த நண்பர்கள் என்னைச் சந்திக்க எனது அறைக்கு வந்தார்கள். அன்றையத் தேதியில் என்னைச் சேர்த்து பி. வகுப்பில் இருபது பேர்கள்தான்! அந்த இருபது ப்ேர்களில் தி. மு. கழக அரசி யல் கைதிகளைத் தவிர மற்றவர்கள் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப் பெற்றவர்கள். அவர்களில் தோழர்கள் கந்தசாமி யும், கஜேந்திரனும் எனக்கும் ந்ண்பர் மார்க்கண்டேயனுக்கும் ஆரம்ப உதவிகளை எந்தப் பிரதிப்பயனையும் கருதாது செய்தார் கள். கந்தசாமியும், கஜேந்திரனும் ஆயுள் தண்டனை பெற்ற வர்கள். 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கல்வரத்தின் போது வீராம்பல் மாதாகோயில் ஷல்ட்டிங் வழக்கில் தண்டிக் கப்பட்டவர்கள். இவர்களின் பெயர்கள் ஒரு காலத்தில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் அடிபட்டன. கந்தசாமி சகோதரர்கள் முதுகுளத்தூர் தாலுக்காவில் வளமான குடும்பத்தைச் சார்ந்த வர்கள். இலஞ்சம்பனூர் என்பது அவர்களது சொந்தவூர். அப்பேர்ப்பட்ட கந்தசாமி சகோதரர்கள் சிறைக்குள் ஒரு வரம் புக்குட்பட்ட வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிருர்கள். அவர் களைக் கேட்டால் நாங்கள் ஈடுபட்டது ஒரு கெளரவப் போராட் டம் என்கிருர்கள், சட்டம் அதை ஏற்றுக்கொள்ள வில்லையே!

14