பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறை கொடியதுதான்; வெளியில் தேவைகளைப் பெருக்கி வாழ்ந்தவர்களுக்கு சிறை வாழ்க்கை நரக வாழ்க்கையாகத் தான் தெரியும். ஆளுல் மனத்தில் நாம் எதற்காகச் சிறைக்கு வந்திருக்கிருேம் என்று நினைக்கும்போது உற்சாகமாகத்தான் இருக்கிறது. எந்த அரசியல் கைதிக்கும் இந்த உற்சாகம் மாறுபடாது; கிடைக்காமல் போகாது. r

ரோடு எஞ்சினைப்போல் நாட்கள் மெதுவாக ஊர்ந்தன: சிலநேரங்களில் உலகத்திலுள்ள கடிகாரங்களெல்லாம் கெட்டுப் போய்விட்டனவோ என்றுகூட எண்ண்த்தோன்றும். நாட்கள் நகரவே நகராது. ஒரே கொட்டடி-முப்பதடி நீளம், பதினைந்தடி அகலம்! ஒரே சாப்பாடு-காலையில் வெண்டைக்காய், மாலையில் தடியங்காய்! தூங்கி விழித்தால்-எதிரே இருபது கஜதுரத்தில் தூக்குத்தண்டனை பெற்ற கைதிகளின் முகதரிசனம்! மேலே ஒரு உலகம் இருப்பது உண்மையென்ருல், கீழே ஒரு உலகம் இருப்பது உண்மைதான். அது சிறைதான். : - 10 - 9 - 64

பி. வகுப்பு இருப்பது முதல் பிளாக்கில்! அது எட்டு அறைகள் கொண்டது. நாஞ்சில் மனேகரன் அவர்கள் முதல் அறையில் இருந்தார். நான் நாலாம் அறையில் இருந்தேன். அடிக்கடி நான் அவரைச் சந்திப்பதுண்டு. அவர் கிழக்காசியச் சுற்றுப் பயணத்தை முடித்து வந்தபின்னர் அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பே இல்லாமலிருந்தது. சிறை அந்தச் சந்திப் புக்கு பெரிதும் உதவியது. அவரது சுற்றுப் பயணத்தை விளக்கி சென்னையில் பல பொதுக்கூட்டங்களில் அவர் பேசி இருந்ததை செய்தித்தாள்களில் தான் படிக்க முடிந்தது. இன்று ஒய்வாக இருந்து அது பற்றி பேசினுேம். அவரது சுற்றுப் பயணத்தில் மிகமுக்கியமானது பார்மோசா போய் சியாங்கேஷேக்கைச் சந்தித்ததுதான்-இது என்கருத்து. பார்மோசா எப்படி இருக் கிறது என்று கேட்டேன். பார்மோசா என்ருல் அழகிய தீவு என்றுதான் அர்த்தம்' என்ருர் மனேகரன், தொடர்ந்து அவர் கூறினர்; சியாங்கே ஷேக்கைப் பார்க்கப்போல்ை உடனே பார்த்துவிடமுடியாது. கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அவர் வருவார். வருமுன்பு, பழைய காலத்து நாடகங்களில் ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, ராஜ, ராஜ......" என்று பராக்குக் கூறுவதைப்போல் ஒருவன் கூவுகிருன். அதன் பின்னர்தான் ஷேக்கும் அவரது மனைவியும் வருகிருர்கள். வந்ததும் நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக் கொண்டோம். நண்பர் ராஜாராம் எம். பி. அவர்களும், வல்லபாய் படேலின் மகன் தயாபாய் படேலும் சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றி ருந்தார்கள். சோலங்கி என்னும் குஜராத்தி எம்.பி.யும் உடன் வந்திருந்தார்.

15