பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“சியாங்கே ஷேக் எடுத்ததும், "இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் எப்படி இருக்கிறது' என்று தான் கேட்டார். "வங்கத் தில் கொஞ்சம் இருக்கிறது' என்ருர் படேல். ஏன் கேரளாவில் இல்லையா' என்ருர் திருமதி ஷேக். இருந்து உடைந்து விட்டது' என்றேன் நான். சியாங்கே ஷேக்கிற்கு ஆங்கிலம் தெரியாது. திருமதி ஷேக் ஆங்கிலத்தை சுவைபடப் பேசினர். . இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் எதிர்காலம் எப்படி இருக் கும்?' என்ருர் திருமதி சியாங்கே ஷேக். "ஒருபோதும் இந்திய அரசாங்கத்தை கம்யூனிஸ்டுகள் கைப்பற்ற முடியாது' என்று திட்டவட்டமாகப் பதில் சொன்னேன். ஆமாம்; உண்மைதான். அவர்கள் இப்போது இரண்டாக உடைந்து விட்டார்கள். இல்லையா என்ருர் திருமதி சியாங். இரண்டு என்ன, ஐந்து!" என்றேன் நான். எப்படி என்று கேட்டார் அவர். 'வலதுசாரி, இடதுசாரி, மத்தியசாரி, வலது-இடதுசாரி, இடது-வலதுசாரி' என்று விளக்கிச் சொன்ன பிறகு அவர்களுக்கு விளங்கியது".

மனேகரன் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் போது நான் குறுக்கிட்டேன். - - s

இந்தியாவைப் பற்றி சியாங்கே ஷேக் என்ன நினைக் கிருர்?'-நான் கேட்டேன்

'இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் சியாங்கே ஷேக் இந்தியாவின் குரலை ஆதரித்தார். கைகொடுத்தார். பிரிட்டனின் கோபத்திற்கும் பயப்படாமல் இந்தியாவை ஆதரித்தார் சியாங். ஆனல் இந்தியா பார்மோசா வின் விடுதலையை ஆதரிக்கவில்லையே என்ற கவலைதான் சியாங்கிற்கு! இதை எங்களிடம் வெளிப்படையாகவே சொன்ஞர்' என்ருர் மனேகரன். அத்துடன் ம .ே ைக ர ன் இன்னென்றையும் குறிப்பிட்டார். - -

'அப்துல் ரசாக் மலேசியாவின் துணைப்பிரதமர். அங்கு சீனர்கள்தான் இந்தியர்களைக் காட்டிலும் அதிகமாக இருக் கிருர்கள். இருந்தும், சீனர்களுக்கு அஞ்சாமல் சீனர்கள் இந்தி யாவின் வடக்கு எல்லையைத் தாக்கும்போது மலேசியா இந்தியா வுக்கு ஆதரவாக சீனவைக் கண்டித்தது. ஆளுல் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா சிக்கலில் மலேசியாவுக்கு ஆதர வாக ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று அப்துல் ரசாக் என்னிடம் இதைக் கூறும்போது அவர் முகம் கருத்துச் சிவந்து விட்டது' என்ருர் மனேகரன். -

பார்மோசாவில்வேறு ஏதாவது சிறப்பு உண்டா? இது என் கேள்வி, -

16