பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பார்மோசாவிலிருந்து இருநூறு மைல்களுக்கு அப்பால் சன்மூன்லேக் என்று ஒரு ஏரி இருக்கிறது. அங்கே ஒரு புத்தர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு கல்லறை. அந்தக் கல்லறைக்குள் சீன யாத்திரிகன் யுவான் சுவான் மண்டை ஓடு வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படு கிறது. அங்கே போய் அவைகளைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ருேம். இது மனேகரன் பதில், - - - .

சன்யாட்சன் மனைவி உயிரோடு இருக்கிறதா?”

'இருக்கிருரே! அவரது சகோதரிதான் திருமதி சியாங். இன்னொரு சகோதரி இருக்கிருர். அவர் ஒரு பேங்கரின் மனைவி யாகிவிட்டார். தமிழர் முறையில் சொன்னுல் சியாங்கே ஷேக் கும், சன்யாட்சன்னும் 'சகளைகள்' என்ருர் மனேகரன்.

"ஜவஹர்லால் நேருவைப்பற்றி நீங்கள் சென்ற நாடு களில் என்ன நினைக்கிருர்கள்?’’ . . .

நேருவை மதிக்கிருர்கள் ஆளுல் இந்தியாவை மதிக்க வில்லை. இந்திய நாணயத்திற்கு எந்த நாட்டிலும் மதிப்பில்லை. விமான சர்வீஸ்களில் இந்திய நாணயத்தைக் கொடுத்தால் முகத்தைச் சுளிக்கிருர்கள். கட்ைகளில் கொடுத் தால், ஸ்டர்லிங் இருக்கிறதா?, டாலர் இருக்கிறதா?" என்று அலட்சிய மாகக் கேட்கிருர்கள். இந்திய நாணயத்திற்கு வெளி நாட்டில் தான் மதிப்பில்லை என்று இல்லை, இந்தியாவிலேயே இந்திய நாணயத்தை மதிக்காத இடம் ஒன்று இருக்கிறது. அது ஜெயில்! இங்கே காசுக்கு மதிப்பில்லை, ஷேவிங் - இரண்டு பீடிகள் சோற்றுக்கட்டி-ஐந்து பீடிகள்! கடலை உருண்டை-மூன்று பீடிகள்!” என்று ஒருபோடு போட்டார் மனேகரன். அவர் சொல்வது முற்றிலும் உண்மை தான். காசு இல்லாமலேயே சிறையில் பண்டமாற்றுதல் கச்சிதமாக நடைபெறுகிறது.

14-9 - 64

எனக்குச் சிறையில் பைண்டிங் வேலை தரப்பட்டது. பைண் டிங் இலாகா எட்டாம் பிளாக்கில் இருக்கிறது. மதுரைச் சிறை யிலுள்ள பிளாக்குகளில் எட்டாம் பிளாக்குத்தான் கவர்ச்சியா கவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். அந்த பிளாக் தொலைவிலி ருந்து பார்ப்பதற்கு அலிபாபாவின் மாயமாளிகை போல் தெரியும். வட்டவடிவமான கோட்டைச் சுவர், வாசல் மட்டும் இரண்டு பேர்களுக்கு மேல் சேர்ந்தாம் போல் துழைய முடியாத அளவு சிறியது. அந்தப் பிளாக்கில்தான் பி. வகுப்பினர் குளிப் பதற்கு தண்ணிர்த் தொட்டியிருக்கிறது. மதுரைச் சிறையில்

17