பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீர்ப்பஞ்சமே இல்லை. குளிப்பதற்கு வசதி அதிகம் வீட் டில் பெண்கள் குளிப்பதற்கு எவ்வளவு மறைவு வைக்கப் படுமோ அந்த அளவுக்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருக்கும். நான் போன உடன் பழைய நண்பர்களிடம்:கேட்டேன், 'என்ன பெண்கள் குளிக்கும் இடம் போல் தெரிகிறதே' என்று.

"ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த பிளாக் முதலில் தண்டிக்கப்பட்ட பெண்களுக்காகத் தான் ஒதுக் கப்பட்டிருந்தது' என்ருர் நண்பர் சந்தியாகு. சந்தியாகு யார் தெரியுமா? அதைப் பிறகு கூறுகிறேன். -- - -

'இங்கு தான் துர்காபாய் தேஷ்முக் முன்பு வைக்கப்பட்டி ருந்தார்' என்று கூறி எனக்கு ஒரு கூடத்தைக் காண்பித்தார் நண்பர் சந்தியாகு. அந்தக் கூடம் குளுமையான இடத்தில் அமைந்திருந்தது. வேப்பமரங்கள் முன்னடியும் பின்னுடியும் இருந்தன. - .

மதுரைச் சிறையிலுள்ள தொழிற்சாலைகளில் பைண்டிங் இலாகா முக்கியமானது. மதுரை, இராமனுதபுரம் மாவட்டங் களின் அரசாங்கக் கஜானுக்களின் குறிப்பேடுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. சர்க்கார் வரவு செலவுக் கணக்குகளின் வவுச்சர்களெல்லாம் இங்குதான் தொகுத்து பைண்டு செய்யப் படுகின்றன, . r .

முன்பு பெண்கள் வைக்கப்பட்டிருந்த கூடத்தில் இப்போது காகிதக் கூடுகள் செய்யப்படுகின்றன. சர்க்கார் பணிமனை களுக்குத் தேவையான கூடுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஆயிரம் கூடுகளைத் தயாரிக்கிருர்கள். இராமதை புரம் மாவட்டதி.மு.க. துணைச்செயலாளர் மாங்குடி மதியழகன் இந்த இலாகாவில் தான் பணி புரிந்தார். இராமளுதபுரம் வட்டச்செயலாளர் தோழர் மாரிமுத்து,சாத்தூர் வட்டத் துணைச் செயலாளர் வரதராஜன் இருவரும் மாங்குடிக்குப் பக்கத்தில் இருந்து தினசரி கவர் கட்டிங் பணியில் ஈடுபடுவார்கள். -

காலை 11-30 மணிவரை தொழிற்சாலையில் இருக்க வேண்டும். பள்ளி வாழ்க்கையின் பழைய, இன்ப நினைவுக ளெல்லாம் தினசரி நம் உள்ளத்தில் அலைமோதும் கட்டம் அது.

சந்தியாகு-இந்தப் பெயர் தி. மு. க. தோழர்களின் உள்ளங்களில் ரீங்காரம் செய்து கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. பத்திரிகைகளிலும், சில வேளைகளில் ரேடியோக்க வரிலும் இந்தப் பெயர் ஒலிபரப்பப்பட்டது. சந்தியாகு, ஜெக நாதன், பொன்னுச்சாமிபாண்டியன்-இம் மூன்றும் கூட்டுப்

$8