பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர்கள். இம் மூவரும் தூத்துக்குடி. கே. வி. கே. சாமி கொலை யில் தொடர்பு கொண்டு தண்டிக்கப்பட்டவர்கள். தூக்குத் தண்டனை பெற்ற பின் சுப்ரீம் கோர்ட்டால் ஆயுள் தண்டனை வாங்கியுள்ளார்கள். மூவருமே மதுரைச் சிறையில்தான் இருக் கிருர்கள். இத்த மூவரில் சந்தியாகுதான் முதலில் எனக்கு அறிமுகமானவர். முதலில் எனக்கு அவருடன் பழகுவதற்குக் கூச்சமாகத்தான் இருந்தது. சிறையில் யாருடன் பேசுவது? எந்தப் பக்கம் திரும்பினுலும் பல்வேறு வ ைக யா ன குற்றவாளிகள்தான் இருக்கிருர்கள். குற்றவாளிகள் பிறக் கிருர்களா? இல்லை. பிறவியிலேயே குற்றவாளிகளாக இருந் தால் அவர்களைத் தீண்டக்கூடாததுதான்? பேசுவது தீதுதான்? ஆளுல் குற்றவாளிகளின் உற்பத்தி அப்படியல்லவே! கோபக் குறியும், சகிப்புத்தன்மை இன்மையும், வறுமையும், மான உணர்ச்சியும் தான் குற்றவாளிகள் பெருகுவதற்கு விதைகளாக அமைகின்றன. -

சந்தியாகு முதலில் என்னைச் சந்தித்தபோது என்னுடன் பேசுவதற்கு வெட்கப்பட்டார் என்பதை அவரே மறுக்க மாட்டார். -

'அண்ணுச்சி என்னைப்பற்றி அருவருப்பு அடையாதீர்கள், நான் நல்லவன். சாமியின் கொலைக்கு அரசியல் காரணமல்ல; சொந்த விவகாரம். அவரது கொலை நடப்பதற்குச் சில மாதங்கள் முன் அவரது ஆட்கள் என்னை வெட்டினர்கள்! நான் காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டேன். அதிலிருந்து பகை துளிர் விட்டது. நான் அவரைத் தீர்த்திராவிட்டால் அவர் என்னைத் தீர்த்திருப்பார்-சந்தியாகு என்னிடம் கூறும் போதே அவரது கோபம் தணிந்து நீண்ட நாட்கள் ஓடிவிட்டன என் பதைத் தெரிந்து கொண்டேன். அவரது குரலில் அந்த அளவு தளர்ச்சி இருந்தது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் ஜெகநாதனும், பொன்னுச்சாமி பாண்டியனும். மூவரும் வெளி யில் வரும்பேர்து அமைதியான பொது வாழ்க்கைக்குத் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தி மொழிப்பயிற்சி, மெட்ரிகுலேஷன் தேர்வு என்று - இப்படி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிருர்கள். *

15-9-64

சினிமா உலகம்' என்பதைப்போல சிறையும் ஒரு தனி உல்கம் தான். கால்ஷிட், செவன்-டு-ஒன், டு-டு-செவன். அவுட் டோர், இ ன் டோர் குளோசப், லாங்ஷாட் என்பதெல்லாம் சினிமா உலகப் பாஷைகள் ஆகும். அதுபோலவே சிறைக்

19