பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டு. கட்டுக்கு அடங்காதவர்கள், விஷமிகள், அடிக்கடி சிறைக்கு வருவோர் முதலியோரை கடலூர்ச்சிறைக்கும், சேலம் சிறைக்கும் அனுப்புவார்களாம். அதல்ை தான் அப்படிப் பெயர்! . - - -

சிறைக்கைதிகள் வெறியர்கள் அல்லர். இருதயமில்லாத வர்கள் அல்லர். அவர்களும் மனிதர்கள் தான். பூக்களைப்பார்த்து மகிழ்கிருர்கள்; யாராவது அதிகாரி வீட்டுக்குழந்தை உள்ளேவர நேர்ந்தால் அதை வாரி எடுத்து முத்தம் கொடுக்கிருர்கள். சினிமா பாட்டுக்களைக்கேட்டு களிக்கிருர்கள். அந்த உள்ளங்களை பக்குவப்படுத்த வகையில்லாமற் போனதுதான் பெருங்குறை:

சிறையில் பொழுது போகாது. ஒரு நாளேக்கு ஐம்பது மணி நேரமோ என்றுகூட எண்ணத் தோன்றும். இந்த நிலையில் நிம்மதி, உற்சாகம் எப்படி இருக்கும். உற்சாகமும், உரிமையும் இல்லாமல் வெளி உலகில் இருந்ததையே காந்தியார் அடிமை வாழ்க்கை என்று கூறவில்லையா? சிறை வாழ்க்கையைப்பற்றி சொல்ல வேண்டுமா? கைதி பூச்செடிக்குத் தண்ணிர் விடவேண் டும்! ஆனல் அதிலிருந்து ஒரு மலரைக்கூட கொய்யக் கூடாது. கொய்யாமரத்திற்கு வேலிகட்ட வேண்டும். அதிலிருந்து ஒரு பிஞ்சைத் தொட்டால் அவனுக்குக் கைவிலங்கு உரி ைம இல்லாதபோது உபதேசம் ஏறுமோ?

தண்டிக்கப்பட்டவுடன் அரசியல் வாதிகள்கூட உரிமையை இழந்து விடுகிருர்கள். உண்ண, உறங்க, உட்கார, அதிகாரி களின் உத்திரவை எதிர்பார்த்தே செய்யவேண்டும். சிறையின் கோட்டை வாசலுக்குப் போனவுடனேயே அவனது வழக்கமான உடைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. உடனே உரிமை இழந்த மனிதன் என்று பறை சாற்றும் சிறை உடை கொடுக்கப் படுகிறது. அத்துடன் நின்று விடுகிறதா? அந்தகோட்டை வாசலோடு அவனது பெயரும் மறைந்து விடுகிறது. அவனுக்கு நம்பர் கொடுத்துவிடுகிருர்கள். முதல்நாளே மனிதன் உரு மாறி நம்பராகி விடுகிருன். உடை இழந்து, உ ரி ய வ ர் க ள் வைத்த பெயரையும் இழந்த பிறகு அவனுக்கு உரிமையை எங்கே சிறையில் தரப்போகிருர்கள்? பாடும் குயிலின், சிறகை ஒடித்துப் போட்டால் பாடுவதற்குப் பதிலாக வேதனையுடன் கதறுகிறது. அதுபோலத்தான் மனிதர்களும் - சிறைக்கைதி களும் திருந்துவதற்குப் பதிலாக பெருங்குற்றவாளிகளாவதற் குத் துணிச்சலைப் பெற்று வெளியேறுகிருர்கள். இது யார் குற் றம்? இப்படிப்பட்ட குற்றங்கள் எப்போதுதான் களையப்படுமோ தெரியவில்லை. சிறையில் ஒவ்வொரு நாளும் அமைதியான இரவு நேரத்தில் இதுபற்றியெல்லாம் சிந்திக்காமல் ஒரு எழுத் தாளனல்-ஒரு அரசியல் வாதியால் இருக்க முடியாது.

22