பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-10-64 * . . .

அக்டோபர் 8-ம் தேதி மனேகரன் விடுதலையாளுர். அவர் போனபிறகு எனக்குச் சிறிது கவலையாகத்தானிருந்தது. சிறை யின் முகப்புவரை நான் மனேகரைேடு அனுமதிக்கப்பட்டேன். வெளியில் வாழ்த்தொலியும், கரகோஷமும் விண்ணப் பிளந்தன. N.W. நடராஜன் அவர்களும், மதியழகன் அவர்களும் மனே கரனை வரவேற்க வெளியில் இருப்பதாகச் செய்திகள் காற்றில் மிதந்து வந்தன. நான் கோட்டைக்குள்ளே அவர் கோட்டைக்கு வெளியே மனேகரன் சிறைக் கூடத்தை விட்டு வெளியேறி பதினைந்து நிமிடங்கள் வரை கோஷங்கள் அடங்கவில்லை. நமது உறவினர்களும், நண்பர்களும் நம்மை விட்டுப்போய்க் கொண்டி ருப்பது போன்ற ஏக்கம், எனக்கும் உள்ளே இருந்த மற்ற தோழர்களுக்கும் ஏற்பட்டது. அந்த ஏக்கம் நிலைத்திருக்கவில்லை. மழைபோல் சிறிதுநேரம் பெய்து ஓய்ந்துவிட்டது. அந்த மாதத் தில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்ஷர்வேடிவ் கட்சியை ஐந்து வாக்கு வித்தியாசத்தில் தொழிற்கட்சி தோற்கடித்தது. -

கோயம்புத்தூரில் மாஜி சப்இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் சுட்டுக் கொல்லப்பட்டார். -

ரஷ்யத்தலைமைப் பீடத்திலிருந்து குருச்சேவ் தூக்கி எறியப் பட்டார். -

எந்தச் செய்திக்கும் சம்பவத்திற்கும் சிறையில் பரபரப்பு ஏற்படுவதில்லை. தன்னைப்பற்றி, தன் குடும்பத்தைப்பற்றி நினைக்காதவர்கள் இருந்தால் தானே பொது நிகழ்ச்சியில் அக் கறை ஏற்படும் விடிந்தால், எழுந்தால் த லை யி ல் கையை வைத்துக் கொண்டு பெருமூச்சு விடுபவர்கள்தானே சிறையில் அதிகம் இருக்கிருர்கள். நான் மட்டும், அர்ச்சுணன் படுகொலை, இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி கவிழ்ந்தது, குருச்சேவுக்கு அஞ்ஞாதவாசம் என்று கதறி என்ன பயன்? யாருக்காவது அது பற்றிக் கவலை இருக்கவேண்டுமே கொஞ்சம் கூடஇல்லை, எறும்புகளைப்போல் சாரை சாரையாகக் குளிக்கப் போவதற்கும் வரிசைக்கும் நின்று குருபூஜைக்கு வரும் பரதேசிகளைப்போல் சோறு வாங்குவதற்கும், மணியடித்தால் மல்லாந்து படுத்து மனைவி ம க் க ளே நினைப்பதற்கும்தானே நேரம் சரியாக இருக்கிறது.

இந்தக்கட்டத்தில்தான் நண்பர் மலைக்கண்ணன் பி.ஏ., அவர்கள் என் அறைக்குக் குடி புகுந்தார். அவர் அதுவரை சி. வகுப்பில் இருந்தார். மலைக்கண்ணன் அமைதியான குணம்

23