பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைத்தவர். கண்ணியமான அரசியல்வாதி. அவருடன்தான் வெளிநாட்டு அரசியலைப்பற்றிப் பேசுவது வழக்கம், அவர் சர்க்கார் அலுவலராகப் பல இடங்களில் பணி புரிந்து, பின் விலகி, பொது வாழ்க்கைக்கு வந்தவராகையால் எதையும் சிந்தித்துப் பேசப் பழகியிருந்தார். அரைகுறை விவரத்தைவைத் துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார். அவர் எங்கள் அறைக்கு வந்ததும் அங்குள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஆங்கில ஆசாளுகிவிட்டார். தோழர் மலைக்கண்ணனை எல்லோ ரும் வாத்தியார் என்று அழைக்க ஆரம்பித்தனர். நான்தான் அவருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்தவன்.

அந்த மாதத்தில் நடந்த முக்கியமான சம்பவம் சென்னை மந்திரிசபை மீது தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன் மொழிந்து தோழர் மதியழகன் சமர்ப்பித்த காரணங்கள் பிரமிக்கத்தக்கதாக இருந்தன. அதைவிட கலைஞர் அவர்கள் சட்ட மன்றத் தில் புகைப் படங்களைக் காட்டி சர்க்காரின் ஊழல்களை நிரூபிபித் தது கழகத்திற்கு பெருமைதரக் கூடியதாக இருந்தது. இந்தியா விலுள்ள மாநில மந்திரி சபைகளில் சென்னை மந்திரி சபைதான் ஊழலே இல்லாதது என்று இருந்த பேர்லிக் கெளரவத்தை உடைத்து விட்ட கீர்த்தியை தி, மு. க. தட்டிக்கொண்டு போய் விட்டது. இது வடநாட்டுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஏனெனில் ஆங்கிலப் பத்திரிகைகள் கட்டுப்பாடாக கலைஞர், மதியழகன் சொற்பொழிவுகளின் உயிர்க் கருத்துக்களை சிதைத்து வெறும் துண்டுச் செய்தியாக வெளியிட்டுவிட்ட ன. கரண்ட்', * பிளிட்ஸ் போன்ற ஆங்கில இதழ்களுக்கு கலைஞர் காட்டிய புகைப் படங்களும். மதியழகன் காட்டிய ஊழல் குறிப்புகளும் கிடைத்திருந்தால் இந்தியாவில் கெய்ரோனிசத்தின் கிளை ஸ்தாபனம் சென்னையில்தான் முளை விட்டிருக்கிறது என்பதை உலகம்.உணர்ந்திருக்கும். வெளியில் இருந்த பொறுப்புமிக்க வர்கள் இதைச் செய்யாமல் போனது காங்கிரஸ்காரர்களின் பேரதிர்ஷ்டம்தான். -

பகல் இரண்டு மணி! ஜெயிலரின் ஆடர்லி வந்தான். 'உங்களை ஐயா கூட்டிவரச்சொல்கிருர்’ என்ருன்.

ஏன்?"

'யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்கிருர்கள்!'

'யார் வந்திருப்பது? பெயர் தெரியாதா? மனுப்போட்டி ருப்பார்களே!' . . - *

24