பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோடர்வாட்டர்-இவைகள் தான் மருந்துகள், ஒரு நாள் விளை யாட்டாக கம்பவுண்டரிடம் கேட்டேன். உடனே அவர் அப்ருவ ராகி விட்டார்.

"ஏன் கேட்கிறீர்கள்! வெளியில் சொன்னல் வெட்கம்! வருடத்திற்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மருந்து வருகிறது. எப்படிச் ச்ெலவாகிறதென்றே தெரியவில்லை. நான் வந்ததிலி ருந்து இந்தத் தண்ணீர்தான் இங்கே இருக்கிறது' என்ருர்

. . . ffنه بقي

இன்னெரு கம்பவுண்டரைக் கேட்டால் அவரது வாக்கு மூலம் முன்னதற்கு நேர் விரோதமாக இருந்தது.

'என்னசார் மருந்து! இங்கே சிறையில் அஜீரணம்-வாயு இந்த இரண்டு வியாதிகளைத் தவிர வேறு எந்த வியாதியும் வராது. அதற்குத் தேவையான மருந்து இங்கே இருக்கிறது. இதற்கு மேலே என்ன மருந்து வேணும்? கைதிகள் தானே, இவர்களுக்கு வடமலையானும், லெட்சுமண சுவாமி முதலியாரு மாவரணும்' என்ருர், இந்த நேரத்தில் எங்கள் மாவட்ட அவைத்தலைவர் சிவ சண்முகசுந்தரனரும், அருப்புக்கோட் டைத்தோழர் நடராசனும் அவுட்குவாரன்டைனிலிருந்து மருத் துவ மனைக்கு வந்தார்கள். .

'உடம்புக்கு என்ன? என்ே றன்.

ஒன்றுமில்ல்: லேசா உடம்புவலி; நடராசனுக்கு அஜீரன்ம்' என்ருர் தலைவர்.

'டாக்டரிடம் காண்பிக்க வேண்டாமா?'

1. நேற்றே காண்பித்துவிட்டோம் .......... மனச்சாந்திக் குத்தான் இப்படி வந்தோம். இங்கே என்ன வைத்தியமா நடை பெறுகிறது. டாக்டருக்கோ, கம்பவுண்டருக்கோ நோயாளி களிடம் அன்பு இல்ல்ை. எல்லாரையும் 'டா' பட்டம் தான் போடு கிருர்கள். நேற்று இரவு நமது வட்டச் செயலாளர் ஒருவர் என்னிடம் கண்கலங்கச் சொன்னர். கம்பவுண்டர்-அவரையே டேய் உங்களுக்கெல்லாம் என்னடா: வைத்தியம்! பச்சை மூங் கில்வெட்ட வேண்டியதுதான்டா என்ருராம். எனக்கு உடல் கொதித்தது. .

டாக்டரின் அன்பே நோயாளிக்கு ஒரு மருத்துவம் என்பார்கள். சிறை மருத்துமனையில் மருந்தும் இல்லை; அன்பும்

இல்லை. நோய் எப்படிக் குணமாகும்?

28