பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைத்தலைவர் விடவில்லை- இன்னெரு கதையைக் கேட்டீர்களா?' என்ருர்.

'என்ன, சொல்லுங்கள்!'

'நேற்று நானும் நடராசனும் வந்தோம், டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்து கண்பவுண்டரிடம் போங்கள் என்ருர். போனேம். இரண்டு பேரும் சீட்டைக்கொடுத்தோம். கம்பவுண் டர் சீட்டுக்களை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு அறைக்குள் போய்விட்டு வந்தார். வந்ததும் எனக்கு ஒரு அவுன்ஸ் வெள்ளைத் தண்ணிர் கொடுத்தார். நான் குடித்தேன். ஒன்றும் சுவை தெரியவில்லை. - - - . . . . ;

  • யாருக்கு உடம்புவலி?' கம்பவுண்டர் கேட்டார் எனக்குத்தான்' என்றேன். - - - - . . .

'அப்படியா! அஜீரணத்திற்குத் தரவேண்டிய மருந்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். பரவாயில்லை. இந்தாங்க அஜீரணம், நீங்க இந்த மஞ்சத் தண்ணிரைக் குடியுங்கள்’ என்று நடராசனுக்கு ஒரு அவுன்ஸ் மஞ்சள் தண்ணிர் கொடுத் தாம் கம்பவுண்டர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கம்பவுண்டர் சிரித்தார். 'என்ன யோசிக்கிறீர்கள். கவலைப் படாதீங்க. ஒன் னும் ஆகாது. ஜெயில்லே காது வலிக்கு கொடுக்கிற மருத்தை கண்ணுக்கும் ஊத்தலாம். ஒன்னும் செய்யாது. ஏன்னு ஒன்னு வெல் வாட்டர்! இன்னென்று சீ வாட்டர்! எப்படி சிறை மருத்துவமனை பார்த்தீர்களா?' என்ருர். - அரசியல் கைதிகளுக்குக் கூடவா இப்படி என்று நினைக்கத் தோன்றும். . . . .

முதலில் கைதிகளை மனிதர்கள் என்று அவர்கள் நினைத் தால்தானே அவர்களில் யார் அரசியல், யார் கிரிமினல் என்று பிரிக்க மனம் வரும் எடுக்கு முன்னலேயே பலரை கைதி நாயே!” என்று டிகிரியோடு தானே அங்கே அழைக்கிருர்கள்.

நோயாளிகளுக்கும் அங்கே இருக்கும் கம்பவுண்டர்களுக் கும் இடையில் உரையாடல்களைக் கேளுங்கள். 'அய்யா எனக்குக் கழுத்துவலி' - "கழுத்து இருந்தா வலிக்கத்தானே செய்யும் அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும் . . . . . . -

"எனக்கு நெஞ்சுவலி 'நெஞ்சுவலியா? எந்தப்பக்கம் வலிக்கிறது!"

29