பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏன் நீங்கள் அந்தக் கட்சிக்குப் போய்விடுவது தானே!" என்ருர் மார்க்கண்டேயன். -

கொள்கை? அது ஒன்று இருக்கிறதல்லவா!' என்ருர் காங்கிரஸ் கைதி. -

'அந்தக் கொள்கைப் பிடிப்புத்தான் எங்களுக்கும்! நாங்க ளும் ஒரு குறிக்கோளுக்காக வந்திருக்கிருேம்' என்ருர் மார்க் கண்டேயன். காங்கிரசும், கம்யூனிஸ்டும், தி.மு க.வை வீழ்த்து வதற்குச்சிறையில் இணைபிரியாக் கூட்டுச் சேர்ந்திருக்கிருர்கள். வெளியில்கூட இப்படிக்கூட்டு இல்லை. கம்யூனிஸ்டுகள், காங்கி ரசுகள் என்று நான் கூறுவது-சிறையில் அவர்கள் அரசியல் காரியத்திற்காக வந்தவர்கள் அல்லர். சிறைக்கு வந்தபிறகு அப்படி ஆனவர்கள். கொலைக் குற்றம் புரிந்து கொஞ்சகாலத் திற்குள்ளாக விடுதலை பெற்றுவிட வேண்டுமென்பதற்காகச் சிலர் காங்கிரஸ் ஆகியிருக்கிருர்கள். அதுபோலவே கம்யூ னிஸ்டுகளும் வெளியிலிருக்கும்போது அவர்களுக்கு எந்த இசமும் தெரியாது. கம்பிக்குள் வந்தபிறகுதான் கம்யூனிசம்' படிக்கிருர்கள். பேசுகிருர்கள். . 3 - 12 - 64

இராமதைபுரம், முதுகுளத்தூர், பரமக் குடி வட்டத் தோழர்கள் விடுதலையானர்கள். நானும் மதியழகனும் அவர் களை வழியனுப்பிவிட்டு அறைக்கு வந்தோம். சற்று நேரத் திற்குப் பின்னர் சசிவர்ணத் தேவர் அவர்கள் பார்க்க வந்திருப் பதாகச் சொன்னர்கள். நானும் மதியழகனும் போனேம். சட்ட சபைத் தொகுதிப்பிரிவினைபற்றி கலந்து பேசிளுேம். 21-12-64 -ல் கன்னியாகுமரியில் கூடும் தொகுதி நிர்ணயக் கமிஷனுக்கு போகப் போவதாக சசிவர்ணத் தேவர் சொன்னர். அங்கே வலியுறுத்தப்படவேண்டிய இரண்டு முக்கிய திருத்தங்களை நான் கூறினேன். சசிவர்ணத் தேவர் போய் அரைமணி நேரத் திற்குப் பின்னல் சிறைக்குள் ஒரு செய்தி பரவியது. கலைஞர் வந்திருக்கிருர் வெளியில் காரில் உட்கார்ந்திருக்கிருர் என்று பேசிக்கொண்டார்கள். நான் வெகு நாட்களாக அவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகையால் கலைஞர் வந்தி ருக்கிருர் என்ற தகவல் எனக்கு இன்பமளித்தது. அடுத்து இன்னெரு தகவல் வந்தது. தென்னரசு, மதியழகன் இருவரை யும் தவிர மற்றவர்களுக்குத்தான் கலைஞர் அவர்களைப் பார்க்க அ னு ம தி கிடைத்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமான செய் தி வந்தது. கலைஞரிடம் நிறையப் பேசவேண்டும் என்றிருந்தேன். இது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றமே! எனது அறையிலிருந்து தோழர் மார்க்கண்டேயன் கலைஞரைப் பார்க்கப் போயிருந்தார், விவரங்களைக் கேட்டுக் கொண்டேன்.

36