பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:உங்களைப் பார்க்க முடியவில்லையே என்று கலைஞர் மிகவும் வேதனைப்பட்டார். விடுதலையாகும் தோழர்களை வரவேற்பதற்கு கலைஞர் வந்துவிட வேண்டுமென்று அவசரமாகத்தான் புதுக் கோட்டையிலிருந்து வந்தாராம். அதற்குள் நம் தோழர்கள் விடுதலையடைந்து போய்விட்டார்களே, எப்படியும் தோழர்களை மதுரை மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலாவது சந்தித்து வாழ்த்திவிட்டுப் போகிறேன் என்று கலைஞர் உங்களிடம் தெரி விக்கச் சொன்னர்' என்ருர் மார்க்கண்டேயன்.

அதுபோலவே மாலையில் ஒரு நல்லசேதி கிடைத்தது. கலைஞர் அவர்கள் விடுதலையடைந்த தோழர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் எனக்கு மனம் குளிர்ந்தது.

8-12-64

மாவட்ட அவைத்தலைவர் சிவ. சண்முக சுந்தரளுர் அவர் களும் அருப்புக்கோட்டை வட்டத் தோழர்களும் விடுதலை யானுர்கள். மூன்று மாதங்கள்வரை என்ளுேடு பழகி உடனி ருந்து உணவருந்தி குது.ாகலமாக இருந்து வந்த அருப்புக் கோட்டைப் பெரியவர் என்னிடம் விடைபெறும் போது எனக் குத்துக்கம் தொண்டையை அடைத்தது அவர்களை வரவேற்க திரு. என்.வி. நடராசன் அவர்களும். கே. ஆர். ராமசாமி அவர் களும் வந்திருப்பதாகச் சொன்னர்கள். சிறை புகுந்தவர்க ளுக்கு உடனடியாகக் கிடைக்கக் கூடிய உற்சாகம் இந்த வரவேற்பு ஒன்றுதானே? தி.மு.க. மேலிடம் இந்தப் பணியைக் கூடுமானவரை சீரியமுறையில் நிறைவேற்றி வைத்தது.

அருப்புக்கோட்டைத் தோழர்கள் விடுதலையான நாளிலி ருந்து மேலதிகாரிகளைச் சந்திக்கும் படலம் ஆரம்பமாயிற்று நான்கு மாதத்தண்டனை பெற்றிருந்த மாங்குடி மதியழகன், மலைக்கண்ணன் பி.ஏ., இராமேசுவரம் ச. மாரிமுத்து, மம்சா புரம் சங்கையா ஆகிய நால்வரின் விடுதலைத் தேதியை அறி வதற்காகத் தினசரி சிறை அதிகாரியைச் சந்திக்க வேண்டிய தாயிற்று. எனக்குத் திரை உலகத் தொடர்பு கொஞ்சம் உண்டு. அதில்தான் மூடு (மன நிலை) என்று அடிக்கடி சொல். வார்கள். கதாசிரியருக்கு இன்று மூடு சரியில்லை; பாடலாசிரி யருக்கு மூடு சரியில்லை என்பார்கள். அதுபோலச் சிறையிலும் சொன்னர்கள். காலையில் ஜெயிலர் (சிறை அதிகாரி) நன்ருகப் பேசுவார். பகலில் கடுகடுப்பாகப் பேசுவார். மாலையில் சிரிப் பார். பக்கத்திலுள்ள குமாஸ்தாவிடம் கேட்டால் இன்றைக்கு ஜெயிலருக்கு மூடு சரியில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள்!

37