பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பார்கள். பிளாட்டிங் பேப்பர்-காகிதத்திலுள்ள மையத் தான் உறிஞ்சும். ஆளுல் இந்தக் காக்கிச்சட்டை -நெஞ்சிலுள்ள ஈரத்தையே உறிஞ்சி எடுத்து விடுகிறது. கைதிகள் விடுதலை யாகும் தேதியைத் தெரிவிப்பதென்றல் அதிகாரிகளுக்கு நஞ் சாக இருக்கிறது. இருபது தடவை நடந்தபிறகு 16-12 64-ல் மதியழகன் அணியினர் விடுதலை என்று தெரிந்து கொண்டேன்.

கலைஞர் அவர்கள், மதுரைக்கு வருவதாகக் கேள்விப் பட்டேன். டிசம்பர் 15-ம் தேதியுடன் மதுரை முத்து அணியினர் கைதாகி ஒராண்டு முடிவடைவதையொட்டி மதுரையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தப்போவதாகவும் அதில் கலைஞர் பேசப்போவதாயும் திரு.பி. எஸ் மணியம் தகவல் தெரிவித்தார். அதையொட்டி 16-12-64-ம் தேதியன்று சிறை வாயிலில் மாங் குடி மதியழகன வரவேற்க கலைஞர் அவர்களை வருகைதரும் படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் இசைவளித்தார்கள்.

16 - 12 - 64

டிசம்பர் 16-ம் நாள் வந்தது. சிறை அதிகாரி, நண்பர்களை காலை 8 மணிக்குள் விடுவித்தால்தான், கலைஞர் அவர்கள் தோழர்களை வரவேற்க முடியும் என்றநிலை உருவாகியிருந்தது பகல் 12 மணியளவில் நெல்லை நகராட்சியில் அறிஞர் அண்ணு அவர்களின் படத்தைத் திறந்துவைப்பதற்கு கலைஞர் அவர்கள் இசைவளித்திருக்கிருர். ஆகையால் கலைஞர் அவர்கள் காலையில் நெல்லைபோய் விட்டார். இராமதைபுரம், மதுரை மாவட்டத் தோழர்கள் மதியழகன் குழுவினரை வரவேற்ருர்கள் என்று தெரிய வந்தது. அன்று மாலை மானுமதுரை பொதுக் கூட்டத்தில் கலைஞர், மதியழகன் மற்றும் அனைவரும் கலந்து கொண்டதாக மறுநாள் செய்தி கிடைத்தது மகிழ்ச்சிதான் எனக்கு. - .

17-12-64

மாங்குடி மதியழகனுடன் விடுதலையடைந்தவர்களில் மலைக் கண்ணன் பி.ஏ. அவர்களும் ஒருவர். அவரை வரவேற்பதில் பர மக்குடி நகர தி.மு.க.வும், வட்ட தி.மு.க வும் போட்டியிட்டுக் கொண்டு அதனல் ஆத்திரமடைந்த பரமக்குடி நகர தி.மு.க. தோழர்கள் மலைக்கண்ணனுக்கு கருப்புக்கொடி காண்பித்ததாக உடன்தகவல் வந்தது. இதைவிடக் கொடுமையான தகவலை வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை. நான் சிறையில் இருந்து கொண்டு எனக்கு வரும் கோப்த்தை யாரிடம் காண்பிக்க

38"