பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும் கோபத்தை அடக்குவதற்கு மலைக்கண்ணனின் பொறுமையையும், அவரது அடக்கத்தையும் எண்ணிக் கொண்டு ஆறுதலடைந்தேன். வெளியார் தினசரிகளில் மாறி மாறி அறிக்கைகள் வந்தன. அந்த அறிக்கைகளையும் பார்த்தேன். நானே ஏதும் செய்யமுடியாத நிலையில் இருக்கி றேன். மாவட்டப் பொறுப்புக்குழு எல்லாவற்றையும் சீர் செய்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு மேலோங்கியிருந்தது. பரமக்குடி சம்பவத்தைத் தொடர்ந்து எனக்கு மூன்று நாட்கள் நிம்மதியில்லை.

20 - 12 - 64

அன்று இரவு 7-30 மணிக்கு அற்புதமான நாதசுர இசை வானெலியிலிருந்து தெரித்து மிதந்து வந்தது. நீண்ட நாட் களுக்குப் பின்னர் அன்று தான் நாதசுர ஓசையை நான் கேட் கிறேன். யாரோ வாசித்தார்கள். பைரவி ராகம் என்னைத் துரங்கவைத்துவிட்டது. வாசிப்பது யாராக இருக்கும்? காருக் குறிச்சியாக இருக்காது! அது ஒரு விதமான சந்தம்! திருமெய் ஞானம் நடராச சுந்தரமும் இல்லை-அவரது வாத்தியம் நிரடா னது. வேறு யார் இப்படி வாசிப்பது? புல்லாங்குழல் போல் இருக்கிறதே என்று பெருமூச்சு விட்டேன். கச்சேரி முடிவில்தான் தெரிந்தது, வாசித்தது ஷேக் சின்ன மெளலான என்று! தவில் வாசித்தவர் வலங்கை மான் சண்முகசுந்தரம், நாதம் அவருடன் பேசுவது போல் எனக்குப்பட்டது. கிளியின் பேச்சு, புலியின் கர்ஜனை எல்லாமே அந்தத் தவிலிலிருந்து கிளம்பின. இசை தான் எவ்வளவு மகத்தானது. எவ்வளவு சக்தி அந்த சக்தியை உருவாக்கும் கலைஞர்களிடம் தான் எவ்வளவுதிறமை!இசையை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் மகிமை புரியும்.

ஷேக்சின்னமெளலானுவின் நாதசுரக் கச்சேரியை முதன் முறை நண்பர் முரசொலி மாறனின் திருமணத்தில் கேட்டேன். அன்று ராகவப் பிள்ளை தவில் வாசித்தார். இப்போது அவர் இல்லை. இசையுலகின் துர்பாக்கியம் அவர் மறைந்துவிட்டார். முன் வரிசையில் உட்கார்ந்து கச்சேரி கேட்டேன். எனக்கு அடுத்த குரிச்சியில் அறிஞர் அண்ணு அவர்களும், அவருக்கு அடுத்த குரிச்சியில் மந்திரி மன்ருடியாரும் உட்கார்ந்து கச்சேரி கேட்டார்கள். . -

வித்துவான் சின்னமெளலான கதர் உடுத்தி கிராப்புத் தலையுடன் மேடைக்கு வந்தார். பார்ப்பதற்கு காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்போல் இருந்தது. நாயனத்தை அவர் பிடித்து வாசிக்கத் தொடங்கினர். நாதசுரக் கலையின் நுணுக்கங்களை

39