பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பொழுதும் பேசிவிட்டார் சாவு கொஞ்சம் தான்' என்று சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. + -

சில பத்திரிகைகள் தாங்கள் எழுதுவது சுத்தப் பொய் என்று தெரிந்தும் துணிச்சலாகப் பொய்களை எழுதுகின்றன. தினசரிகளில் செய்திகளைப் புனைந்து வைத்தால் கேட்க நாதி யில்லை என்று ஆகிவிட்டது தமிழகத்தில் பிரபலசினிமா நடிகர் ஜெமினி கணேசனும், சாவித்திரியும் இராமேஸ்வரத்தில் சிக்கித் தவிப்பதாகவும், தங்களது நிருபர் நேற்று அவர்களைப் பேட்டிக் கண்டதாகவும் ஒரு பத்திரிகை 25 - 12 - 64ம் தேதி எழுதியது. எனக்கு அவர்களது நிலை வருத்தத்தைக் கொடுத்தது. ஆளுல் அவர்கள் 23-12-64ம் தேதியே மதுரை வந்து அன்றே விமான மூலம் சென்னை போய் விட்டார்களாம். பிற்பாடுதான் இந்த உண்மை நாட்டுக்குத் தெரிந்தது.

தீப்பிடித்த வீடுகளில் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சாமான் களைத் திருடுவதுபோல் நெருக்கடி நேரத்தில் சில தினசரிகள் இப்படிச் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன. இதுவும் ஒருவகையான திருட்டுத்தானே? கை கால்களை நிதானமின்றிப் பயன் படுத்தினுல் சுளுக்கிக் கொள்கிறதல்லவா? அதுபோல் பொய் சொன்னல் நாக்குச் சுளுக்கிக்கொள்ளக் கூடாதா? பொய் யாக எழுதினால் விரல்கள் வீங்கிவிடக்கூடாதா? பொய் சொல்வது மாபாதகம் என்று கூறிவிட்டு பொய் சொல்வதற்கு அவயவங்களை இயங்க விடலாமா? இது படைத்தவன் குற்றமா. பயன் படுத்துபவன் குற்றமா? -

1 - 1 - 65

புதுவருடம் பிறந்தது. செய்தி இதழ்களெல்லாம் புத்த்ாண் டைப்பற்றியே சோதிடங்களை வெளியிட்டிருந்தன. 'தமிழ்நாடு: இதழ் மட்டும் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் சம்பவங் களை விரிவாகக் குறிப்பிட்டிருந்தது. அதிலும் தி. மு. க. வின் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை வெகுதெளிவாக எழுதியிருந்தது. இந்தியைக் கண்டிப்பதில் கருமுத்து தியாகராசன் செட்டியார் அவர்கள் நமக்குத் தோள் கொடுத்தவர்: இன்னும் துணை நிற்பவர், ஆகையால் அவரது வாளாக தமிழ்நாடு’ நாளிதழ் இயங்குவது வியப்புக்குரியதாகாது. - ...

இந்தியை எதிர்ப்பதில் தி. மு. க. வின் குறிக்கோள் நிலை யானது என்பது நாடறிந்த உண்மை. 1988லிருந்து அண்ணு அவர்கள் இந்தியை எதிர்த்து வருகிருர். இப்போது 1965 நடக் கிறது. இருபத்திஏழு ஆண்டுகாலமாக இந்த மொழிப்

41