பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போசாட்டம் நடந்து வருகிறது. ஆமாம் இந்தி எதிர்ப்புச் சரித் திரம் இருபத்தி ஏழு ஆண்டு காலமாகக் கொஞ்சங்கொஞ்சமாக எழுதப்பட்டு வருகிறது. புதுப்புது ஆட்கள் - தலைவர்கள் இந்தி எதிர்ப்பு அணியில் சேர்ந்து வருகிருர்கள். ஆச்சாரியரும் அவர் களில் ஒருவர். -

1-1-65ம் தேதிய இதழ்களில் சில இதைக் குறிப்பிட்டி ருந்தன. அந்த மகிழ்ச்சியில் நான் படுக்கைக்குப் போனேன்.

என் அறைக்கு எதிரே ஒரு சிறிய பிளாக் இருக்கிறது. அதில் ஆறு அறைகள் இருக்கின்றன. தூக்குத் தண்டனைக் கைதிகள் அதிகமாகிவிட்டால் அந்த அறைக்குள் தள்ளி வைப் பார்கள். " . . . . -

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 15-க்கு மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட .ெ காலை வழக்குகளில் பெரும்பா லானவை தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டவை. இதல்ை இருபதுக்கு மேற்பட்ட தூக்குக்கைதிகள் ஆயுள் தண்டனை-ஏழு வருடம்இப்படித்தண்டனை பெற்று இறங்கினர்கள். இதல்ை என் எதிரே இருந்த பிளாக் காலியாகி விட்டது.

ஆனல் அன்று இரவு திடீரென்று எதிர்பிளாக்கிலிருந்து பாட்டொலி வந்தது. -

"அமுதும் தேனும் எதற்கு - நீ அருகினில் இருக்கையிலே-எனக்கு!'

-என்ற குரல் கேட்டு எழுந்து எதிர் பிளாக்கைக் கூர்ந்து கவனித்தேன். நிர்வாணமாக ஒருவன் உள்ளே நின்று கொண் டிருந்தான். ------- ---- ; ,

கர்லையில் எழுந்ததும் அவனைப் பார்க்கலாம் என்று இருந்: தேன். ஆனல் நான் பார்க்கப் போகுமுன் அவனே என்னையும் மற்றவர்களையும் எழுப்பிவிட்டுவிட்டான்.

கால்ையில் வார்டர்களெல்லாம் திடுதிடு என்று ஒடும் சத்தம் கேட்டு விழித்தேன். ஆரும் பிளாக் செல்லில் இருந்து மெண்டல் பயல் ஓடிவிட்டான் பிடியுங்கள் பிடியுங்கள்' என்று சத்தம் போட்டார்கள். கால்மணி நேரத்திற்குள்ளாக அவன் பிடிபட்டுவிட்டான். சிறையில் தவறு செய்யாதிருக்கும் போதே அடிப்பார்கள். தவறு செய்துவிட்டால் தோலையே உறித்து விடுவார்களே. பாவம் அந்தப் பைத்தியக்காரனை

42