பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக்கு? மொழி அடித்தார்கள். தெருவில் யாராவது அடித்தால் நாம் சமாதானம் கூறலாம். சிறையில் என்ன, செய்வது கண்களை மூடிக்கொள்ளலாம். அதுதான் நம்மால் சிறையில் செய்யக்கூடிய உதவி.

தடியடி தர்பார் முடிந்ததும் ஒரு வார்டரைக் கேட்டேன், அவன் யார்? என்று. அவர் சொன்ன பதில் எனக்குத் திகைப் பூட்டியது. அந்தப் ைபத் திய க் க | ர ன் ஒரு என்ஜினியர். ஆனந்தன் அவன் பெயர். அவனது பெற்ருேர்களே அவனை உள்ளே அனுப்பி வைத்திருக்கிருர்கள். அவனை அடிக்கும்போது அய்யா, அய்யா, அடிக்காதீங்க அய்யா! நீங்க சொல்றபடி கேட்கிறேன்! என்று அழுதுகொண்டே சொன்னன். அவன் பைத்தியம் சார், இன்ஜினியர் சார் என்று சொல்லிக்கொண்டே அடிக்கிருர்கள். அடித்தால் பைத்தியம் போய்விடுமா? அடித்து நொறுக்கிவிட்டு என்னிடம் வந்து அடியாட்கள் சொன்னர்கள்,

அவன் புத்திசாலி, கெட்டிக்காரன் சார்; இங்கிலீஷ் தலைகீழ் பாடம்; புத்தி பேதலிச்சுப் போச்சு?’’. . . ... . . . . . . . . .

"இவ்வளவு தெரிந்தும் என் அவன அடிக்கிறீர்கள். என்று கேட்டேன். - . . . . ."

tế அடிக்கிறது தானே எங்களுக்கு வேலை, அடிக்கிற வேலை இல்லையின்ன சிறையிலே எதுக்கு வார்டர் உத்தியோகம்?" என்ருர் வார்டர். --- . . .

இதற்கு நான் என்ன பதில் சொல்லுவது

இதிலிருந்து பாடம் தெரிந்து கொண்டேன். சுதந்திர உணர்ச்சி என்பது ைபத் தி ய் த் ைத யும் மிஞ்சக்கூடியது. பைத்தியம் ஏன் ஓடுகிருன்? - . . . .

11-1-6s

அதிகாலையில் ஒரு வார்டர் என் அறைக்கு வந்தார். 'சார் இன்று எம். ஜி. ஆர். உங்களைப் பார்க்க வரப்போகிருர், இப் போதுதான் போனில் பேசி நேரம் முடிவு செய்தார்கள். அன்பில் தர்மலிங்கம் தான் போனில் பேசினர்' என்ருர் அந்த வார்டர். இந்தச் செய்தி காட்டுத் தீ போல் சிறை முழுவது ம் பரவி விட்டது. நானும் அவர் வருவார். என்று எதிர்பார்த்தேன். இராமேஸ்வரத்திற்குப் போய் இருப்பதாகப் பத்திரிகையில் பார்த்ததும் மதுரைச் சிறைக்கு வருவாரென்று எதிர்பார்த்தேன்.

43