பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தி கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு நேரம் போவது கடினமாக இருந்தது. வழக்கம் போல் 9 மணிக்கு வேலைக்கு போனேன். சரியாக 10-30க்கு என்னைக் கூப்பிட்டு அனுப்பி ஞர்கள். எம் ஜி. ஆர். அவர்களிடம் பேசவேண்டியதை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு போனேன். ஆனல் அங்கே வியப்பள்ளிக்கக்கூடிய்காட்சியைக் கண்டேன். எம் ஜி.ஆர். வரவில்லை. மற்றும் எதிர்பாராவகையில் கலைஞர் வந்திருந்தார். கலைஞரைத் தான் எம். ஜி. ஆர். என்று வார்டர் சொல்லிவிட்டார் என்று நினைத்துவிட்டு கலை ஞ ரு பின் பேசிக்கொண்டு இருந்தேன். வெளியில் மூன்று கார்கள் இருந்தன். என்னுடைய நண்பர்கள் பி. எஸ். மணியம்,கு. திருப்பதி, நீ, அன்புச்செழியன், திருச்சி காமாட்சி, கவிஞர் அருளானந்தம், நத்தம் மீரான் முதலானேர் கலைஞருடன் வந்திருந்தார்கள். கால்மணி நேரம் கலைஞர் இருந்தார். பின் விடைபெற்றுக் கொண்டார். அவர் போகும் போது தான் அன்பில் விவரத்தைச் சொன்னர். M.G.R. தான் முதலில் தங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தார். அதற் குள்ளாக சாத்தூரிலிருந்து கலைஞர் வந்து மனுப்போட்டு விட்டார் என்ருர். அதன் பிறகு நானும் அன்பிலும் ஜெயில் அதிகர்ரிய்ை சந்தித்து M. G. R. அவர்களுக்கு ஸ்பெஷல் இண்டர்வியூ தரும்படி வாதாடிைேம். அதன்படி அடுத்தவார் இண்டர்வியூவை ரத்து செய்துவிட்டு அன்றே எம்.ஜி.ஆரையும் ப்ார்த்தேன்.

18-i-65 செ. கந்த்ப்பன் M.P. வந்தார். நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தர்மபுரி இடைத்தேர்தல் பற்றிச் சொன்னர். நூற்றுக்கு நூற்றுப்பத்து நாம் தான்.வெற்றிபெறு வோம் என்ருர். சிறையிலுள்ளவர்களுக்கு மகிழ்வூட்டும் சேதிகள் தான் தேவை. குழப்பம், மனக்கவலை தரும் தகவல்களைக் கைதி க்ளுக்கு-அதுவும் அரசியல் கைதிகளுக்குச் சொல்லுவது விவே. க்மாகாது. அப்படிச் சொல்வதற்கென்றே சிலர் இருக்கிருர்கள். எனக்கும் அப்படிப்பட்ட சோதனைகள் ஏற்பட்டன. இன்பச்சேதி கிடைக்கும் வரை முதலில் கிடைத்த துன்பத்தகவல்கள் துளைத்துக் கொண்டிருக்கும். ஆளுல் ஒன்று வெளியில் இருக்கும் போது ஏற்படும் துன்பங்களைவிட, சிறையில் இருக்கும் போது ன்ற்படும் துன்பம்சதவிகிதத்தில் சாதகமானதுதான். வெளியில் கோபப்பட்டால் :பதிலுக்கு ஏதாவது செய்யக்கிளம்புவோம். உள்ளே இருக்கும் போது பதிலுக்குச் செய்ய முடியாதல்லவா? அது நமக்கு நல்லதுதான்ே? இவையெல்லாம் சேர்த்துத்தான் தியாகம் என்கிருர்களோ?. துன்பத்தைத் த்ாங்கிக் கொள்வது கோபத்தை விழுங்கிக்கொள்வது, பார்க்கக் கூடியவர்கள்ைப். பார்க்க முடியாமல் திணருவது-சுவையில்லாத சாப்பாட்டை சர்ப்பிடுவது-இவற்றின் கூட்டுத் தொகைதான் தியாகம்

44