பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22-1-65

பத்திரிகைகளில் திடுக்கிடும் தகவல்கள் வந்தன. 18-1-65 லிருந்து நடந்துவரும் சட்டமன்ற தொடர் கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்களுக்கும், ஆளுங்கட்சித் தோழர்களுக்கும் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது குடியரசு தினத்தன்று, தி.மு.க. வினர் செயற்குழு தீர்மானப்படி வீடுகளில், கட்சிக் காரியால யங்களில் கருப்புக்கொடி கட்டுவது பற்றி சட்டமன்றத்தில் பிரச்சனை வந்தது முதலமைச்சர் பக்தவத்சலம் முச்சந்திப் போக் கிரியைப்போல் மூர்க்கதனமாகப் பேசியிருந்தார். குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி கட்டினல் பொதுமக்கள் ஆத்திர மடைவர் கலகம் ஏற்படும் ஆளுல் போலிஸ் பாதுகாப்பு இருக்காதென்ருர் முதலமைச்சர். அவர் பலவீனமடைந்து விட்டார் என்பதை அவரது கோப உணர்ச்சி எடுத்துக் காட்டி யது. அதுபோல.23-1-65 வரை சட்டசபையில் பேசினர்.

25-1-65

சென்னையில் அறிஞர் அண்ணு அவர்களும், மதுரையில் நாவலர் அவர்களும், கரூரில் கலைஞர் அவர்களும், அது போலவே பேராசிரியர், மனேகரன், மதியழகன், முதலாளுேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.

நாவலர் மதுரைச் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். ஆல்ை நான் சந்திக்க வாய்ப்பில்லை. வெளிக்கொட்டடியில் அவரையும், அவருடன் வந்திருந்த பி. எஸ் மணியம், காவேரி, திருப்பதி, மற்றவர்களையும் வைத்திருந்தார்கள். அவர்கள் வைக்கப்பட்டிருந்த பகுதி-சிறைக்குள்ளேயே ஒருகுட்டிச் சிறை.

இரண்டு நாட்களுக்குப்பிறகு நாவலர் குழுவினர் சிறை மருத்துவ ம்னையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு அவர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கின்டத்தது ரயிலில். முந்திய ஸ்டேஷனில் ஏறி, இடம் பிடித்துக்கொண்டவன் பின்னுடிவரும் ஸ்டேஷனில் காணுபவர்களைத் தடுக்க ரயிலில் உரிமை பாராட்டிப் பேசுவதைப் போல் சிறையில் நாவ்லர் குழு வினர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்தேன். அறு சுவை உண்டியா? இல்லை. தேவைப்படும்போது கடுங்காபி, சோளம்:கலக்காத தோசை, தயிர் இவைகள் தான்! ஒருவாரம் நாவலர் இருந்தார். அதற்குள் நான், அடிஷனல் சூப்பரின் டெண்ட் என்ற பட்டமும் பெற்றேன். நாவலர் அவர்களிடம்! நாவலர் குழுவினர் தங்கியிருந்த அந்தக்கிழமை எனக்குச் சிறை யாகவே தோன்றவில்லை, நாவலர் பழங்கதைகளையெல்லாம்

45