பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவைகளுக்கு மட்டுமா தீ! தங்களுக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சிலர் மாண்டு போர்ைகள். கோடம்பாக்கத்தில் இருவர், கோவை மாவட்டத்தில் ஒருவர் - அவர் விவசாயி. திருச்சி மாவட்டத்தில் ஒருவர்-அவர் ஒரு தலைமை ஆசிரியர்! இந்தத் தியாகத் தீக்குளிப்புக் கேட்டு பிரதமர் லால்பகதூர் அதிர்ச்சியடைந்து விட்டதாக ரேடியோச் செய்தி அறிவித்தது.

அன்று மதுரையில் தியாகராசர் கல்லூரியைச் சேர்ந்த காம ராசன், காளிமுத்தன் என்ற இரண்டு மாணவச்செல்வங்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்திச் சிறை புகுந் தார்கள்-இல்லை சிறைக்குள் வந்தார்கள் நான் வரவேற்றேன். நான்தானே மதுரைச் சிறையில் பிரதம வரவேற்பாளன்.

27 - 1 - 65

சிறையில் துப்புரவு வேலைகள் மும்முரமாக நடைபெற்றன. பூச்செடிச்சாடிகள், திண்ணைகளிலெல்லாம் திடீர் திடீர் என்று உட்கார வைக்கப் பட்டன. ஏன்' என்று கேட்டேன். கலெக்டர், செசன்ஸ்ஜட்ஜ், ஜெயில் விசிட்டர்கள்-எல்லேர் ரும் வருகிருர்கள்' என்ருர்கள். - . . . . . .

இராமதைபுரம் கலெக்டர் எம். எம் ரஜேந்திரன், மற்ற அதிகாரிகள் எல்லோரும் சிறையைச் சுற்றிப் பார்க்க மாலை 5 மணிக்கு வந்தார்கள். நான் எதிர் பார்க்கவேயில்லை-அவர்கள் அனைவரும் எனது அறைக்கே வந்து விட்டார்கள். . - "உங்களுக்குவேண்டியதெல்லாம் சரியாகக் கிடைக்கிறதா?” கலெக்டர் கேட்டார். “.

இவர் உங்கள் ஜில்லாக்காரர்தான்' என்று சூப்ரண் டெண்ட் என்னைக் கலெக்டருக்கு அறிமுகப் படுத்தினர். - நீங்கள் எந்த ஊர்?'-கலெக்டர். - - 'திருக்கோட்டியூர்-திருப்பத்தூர் தாலுகா-நான். * உங்கள் பெயர்?’ -

தென்னரசு!’ - - - ஒ! நீங்கள் தான? அடிக்கடி பத்திரிகைகளில் பெயர் வரும் எவ்வளவு தண்டனை?' - - . . . . . இவருக்குத்தான் அதிகத் தண்டனை-ஒரு வருடம்!” சூப்ரண்டெண்ட் குறிப்பிட்டார்.

இந்த இடத்தில் சிறைவிசிட்டர் மைேரஞ்சிதத்தம்ம்ை யார் கேட்டார்கள், எதற்காக ஒரு வருடம்?'

48