பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவை எரித்தேன்; அதற்காக!' . - - - -

நல்ல காரியம் செய்தீர்கள் மெத்தச் சந்தோசம்' என்ருரே பார்க்கலாம் அந்த அம்மையார். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க முயன்ருர்கள்; ஆனல் சிரிக்க முடியவில்லை; எல்லோரும் கெஜட்டெட் அதிகாரிகளல்லவா! சிரிக்கலாமா? கலெக்டர் தங்கமானவர்;கைதிகளிடம் அதிகம் பரிவு காட்டினர்.

ஒரு வாரம் தமிழகத்து அரசியல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒடியது. ஆனல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம் மொழிக் கிளர்ச்சியின் காரணமாக நிறுத்தப்பட்டன. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப் Lįł_.L–6ĞT.

காங்கிரஸ்காரர்கள் ஆகஸ்ட் கிளர்ச்சியைப் பிரமாதமாகப் பீற்றிக்கொள்வதுண்டு. ஆனல் அந்தக் கிளர்ச்சி மாணவர்கள் எழுப்பிய இந்தி மொழிக்கிளர்ச்சியின் கால்தூசு பெருது என்று காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொள்ளும் அளவுக்குத் தென்னுட்டு மாணவர்கள் புகழ்பெற்று விட்டார்கள். -

ரேடியோவைத் திருப்பில்ை, இன்று சென்னையில் மாணவர்கள் போராட்டக் கூட்டம் நடைபெற்றது; காரியக் கமிட்டி அமைக்கப்பட்டது; ஒரு குழு முதலமைச்சரைச் சந்தித்தது' என்று செய்திகள் கேட்கும். இந்தக் காலத்தில் பர்மாவில் அவுங்சான் போராட்டத் திட்டம் போட்டு பிரகடனப் படுத்தியதைப் போல் தமிழ் மாணவர்கள் அவர்களது கிளர்ச் சிக்கு வெற்றி முத்திரை கொடுத்து விட்டார்கள். முப்பதாண்டு காலப் போராட்டம், சிறைவாசம்-எதுவுவே சர்க்காரின் உள்ளத்தைத் தொடவில்லை. மாணவர்களின் இருபது நாள் புரட்சி சர்க்காருக்குப் பொறையேற்றி விட்டது. -

கழகத் தோழர்கள் இருவர், தென்வியட்நாம் போராட்டத் தைப்போல், அரங்கநாதன், சிவலிங்கம் தீக்குளித்து விட்டார்கள். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களைச் சில்ர் தீக் குளிக்க வைத்து விட்டார்கள். - - -

நாடெங்குமுள்ள தி.மு.க. தலைவர்கள், எம். எல்.ஏக்கள். செயலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். மாணவர் கிளர்ச் சிக்கும் தி. மு. க. வுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமென சர்க்கார் பயந்தது. இது பைத்தியக்காரத்தனம். தி.மு.க. நினைத்தால் எதையும் செய்யலாம். சக்தி அதற்கு இருக்கிறது.

49