பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல் செய்யக்கூடாததை-செய்யத் தகாததை அது ஒரு போதும் செய்ததில்லை; செய்யவும் விரும்பாது. - ---

மதுரையில் பத்துவயதுப் பாலகர்கள் போராட்டத்தில் ஈடு பட்டிருந்தார்கள். கூட்டங் கூட்டமாகப்போய் கார்களை நிறுத்தி ர்ைகள். காரில் வருகிறவர்கள் கல்லுக்கும் மண்ணுக்கும் பயந்து இந்தி ஒழிக’ என்று சொன்னர்கள்ாம். டி. வி. எஸ் கம்பெனி களில் இந்தி ஒழிக’ என்ற வில்லையை அச்சடித்து அவர்களா. கவே கார்களில் ஒட்டிக்கொண்டார்களாம். இந்த நேரத்தில் சிறையில் ஒரு வேடிக்கை நடந்தது. சிறையின் தலைவாசலில் கேட்கீப்பர் என்ற ஒரு பொறுப்பான அதிகாரி எப்போதும் உட்கார்ந்திருப்பார். அன்று அவருக்குப் பதிலாக ரிசர்வ் ஹெட்வார்டர் உட்கார்ந்திருந்தார். போன் மணி அடித்தது. உடனே ரிசர்வ் ஹெட்வார்டர் போன எடுத்திருக்கிருர்.

'சென்ட்ரல் ஜெயில் மதுரை!” . "தெரிஞ்சுதான் கூப்பிடுகிருேம்: நீங்கயாரு?"

நான் ரிசர்வ் ஹெட் வார்டர் பயந்து கொண்டே பேசினர். *

"இந்தி ஒழிக. என்று சொல்லுங்கள் சொல்றீங்களா: உதைக்கட்டுமா?’ - - -

ரிசர்வ் ஹெட் வார்டர் போன வைத்து விட்டார்.

மீண்டும் மணி அடித்தது. அவர்போனை எடுக்கவில்லை. மணி மறுபடியும் தொடர்ந்து அடித்தது. அவர் போன எடுக்க வில்ல்ை. கால் மணி நேரம் கழித்து ஜெயில் சூப்ரண்டெண்ட் வந்தார். அவர் வீடு சிறைக்கு அருகில்தான் இருக்கிறது.

அவர்முகம் கடுகடுப்பாக இருந்தது. _o. -

. ಐbur நீ தூங்கினியா? காது என்னசெவிடா? கால்மணி நேரமா போன் ரிங் பண்ணினேனே எங்கே போயிருந்தே?’’ சூப்ரண்டெண்ட் எரிந்து விழுந்தார். -

குப்ரண்டெண்டுக்கு சிறை அகராதியில் "துரை” என்று சொல்லுவார்கள். துரைக்கு முன்னல் பயந்து ரிசர்வ் ஹெட் வார்டர் ஒன்றும் பேசாமல் நின்றுவிட்டார். அதனுல் ரிசர்வ் ஹெட்வார்டருக்கு ஒரு நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டது. : . மதுரைச்சிறைச்சாலையில் நூற்றுக்கு Gكتابة م வார்டர்கள் வேலை செய்கிருர்கள். அவர்கள் குடியிருக்கும் வீட்டுக் கக்கூசுகளில் இந்தி எதிர்ப்புக் கோஷங்கள் எழுதப்பட்டன.

50