பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை முறையைக் கொண்டது. ஒரு வாரம் சோகமயமாக இருக்கும். இதற்குக் காரணம் சிறை நிர்வாகம் தான். துரை (சூப்ரெண்டெண்ட்) கோபமாக இருந்தால் கெடுபிடி அதிகமாக இருக்கும். அதல்ை சிறையில் சவுக்கடி தர்பார்கள்; கண்கசியும். துரை குதுகலமாக இருந்தால் கைதிகளுக்கு அதிக கட்டுப்பாடு இராது. அப்படிப்பட்ட நேரங்களில் சடுகுடு விளையாடுவார்கள்.

21 - 4 - 65.

விஜயன் என்ற ஆயுள் கைதி ஏசுவையும் மிஞ்சி ஒரு காரியத்தைச் செய்து கொண்டான்.

விஜயன் அருப்புக்கோட்டை தாலூகாவைச் சார்ந்தவன். கோயம்புத்துாரில் மனைவியுடன் மில்லில் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு மூன்று குழந்தைகள். * , -

அவன் கோவையில் இருக்கும்போதே அவன் தலைக்குள் ஊரல் ஏற்பட்டிருந்தது. மருத்துவம் பார்த்திருக்கிருன்; பலன் கிடைக்கவில்லை. கடைசியாக அவனும் அவன் மனைவியும் வேலையை விட்டு விலகி சேமிப்புப் பணம் ரூ 4000-துடன் சொந்த ஊருக்குத் திரும்பினர்கள். ரூபாயைச் செலவு செய்து மருத்துவம் பார்த்தான். பணம் அழிந்ததே தவிர வியாதி தீரவில்லை. கடைசியாக மனைவியின் ஒப்புதலுடன் எல்லோரும் குடும்பத்துடன் செத்து விடுவது என்று முடிவு செய்தார்கள். முதலில் குழந்தைகளை கிணற்றில் தூக்கிப்போடுவது, பின்னர் தாங்கள் இருவரும் சாவது என்ற முடிவுடன் ஒரு பாழுங் கிணற்றுக்குப் போய் அந்தக் குழந்தையை தூக்கிப் போடும் போது மனைவி கதறி விட்டாள். விஜயன் பிடிபட்டான். தூக்குத் தண்டனை கிடைக்குமென்று எதிர்பார்த்தான். ஆயுள் தண்டனை தான் கிடைத்தது. ‘. . . .

சிறையில் அவனல் தலையில் இருந்த அரிப்பைத் தாங்க முடியவில்லை. டாக்டர்கள் புகைப்படம் எடுத்துப்பார்த்து ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனல் விஜயனே தன் தலையில் புழு ஊரிக் கொண்டிருக்கிறதென்ருன் அன்று மாலை 3 மணியளவில் விஜயன் தன் நெற்றியில் ஆணி ஒன்றை அடித்துக் கொண்டு விட்டான். ஆணி முழுதும் தலைக்குள் போய்விட்டது-ஆளுல், ஒரு சொட்டு ரத்தம்கூட் வரவில்லை. பெரிய ஆயுதங்களைக் கொண்டு இரண்டுபேர் பிடுங்கினர்கள். அப்போதும் அவர் கலங்கவில்லை. "என் தலையில் சுத்தியலைக் கொண்டு அடித்துப் பாருங்கள் டாக்டர்; எனக்கு வலிக்காது: என்ருன். டாக்டர் விளையாட்டாக நீ விஜயணல்ல; வீரவிஜயன் என்ருர். அதிலிருந்து அவனுக்கு விர விஜயன் என்று பெயராயிற்று. • ‘.. - - • - ..."

62