பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 - 4 - 65

திருவாடான வட்டச் செயலாளர் இன்று விடுதலையானர். அவர் என்னை விட்டுப் பிரியும் போது எனக்குச் சஞ்சலமாகத் தானிருந்தது. - “. . - . . . - - - *

தோழர்கள் எஸ். முத்து, பி. எஸ். மணியம், தா. கிருஷ்ணன் காவேரி, திருப்பதி மற்றும் ஏராளமான நண்பர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தார்கள். வழக்கம்போல் கோட்டை வாசல்வரை சென்று வழி அனுப்பி வந்தேன். வெளியில் திற்போருக்கு அது தெரியாது. . . . . . 28 - 4 - 65. - - ... - புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள் மதுரை, விருதுநகர், நெல்லை முதலிய நகரங்களுக்கு வரப்போவதாகச் செய்தித்தாள் களில் செய்திகள் படித்தேன். நிச்சயமாக மதுரைச் சிறைக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படியே காலை 11 மணி யளவில் வந்தார், * * * -- நானும் ராஜாங்கமும் அவரைப் பார்த்தோம். புரட்சி நடிகர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் தென்பட்டார். நிறையப் பழங்கள் வாங்கி வந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

உங்களுக்கு என்ன வேண்டும்?' என்ருர், - * எனது பத்திரிகையை நிலை நாட்டத்தான் துடிக்கிறேன்’’ என்றேன். -

நீங்கள் வெளியில் வந்ததும் ஏற்பாடு செய்கிறேன்" என்ருர், * . . . . . . . - - -

'நண்பர் ராஜாங்கத்திற்குத் தைரியம் சொல்லுங்கள் என்றேன்" . .

- "ராஜாங்கத்திற்கு இது ஒரு நல்லகாலம். நல்லவர்களுக்கு வரும் துன்பம் அவர்களது வளர்ச்சிக்கு ஒரு முன்னறிவிப்பு. எனக்குக் கால் முறிந்த கட்டத்திற்குப் பிறகுதான் நல்லகாலம் தொடங்கியது. எப்போதுமே நியாயமும் உண்மையும் உள்ள வர்களுக்கு இப்படி ஒரு கட்டம் வந்தே தீரும். வந்தால்தான் அவர்களது வாழ்வு சிறக்கும்" என்ருர்,

எம். ஜி. ஆர். அவர்கள் ஏறத்தாழ அரைமணி நேரம் இருந்தார். என்னிடமிருந்த மப்ளரை அவருக்கு அணி வித்தேன். சிறையில் வெளியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. எம்.ஜி.ஆர்.அவர்களிடமிருந்து மீண்டு போகப் பெரும்பாடு பட்டார். -

63.